மனஒருமைப்பாடு
ஏதேனும் ஒரு பொருளின் மீது மனதை நிலைப் பெற செய்வதே மனஒருமைப்பாடு
எனப்படுகிறது. ஒரு பொருளைப்
பார்ப்பது மற்றும் அப்பொருளை பற்றி கேட்பது மட்டுமே மனதில் இருத்தல் வேண்டும்,
ஏனையவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதனால்
மனம் அலைப்பாய்வதை தவிர்க்கப்படும். இவ்வாறு செய்வதின் மூலம்
வெறுமனே அதனை பார்ப்பது என்பதனை தாண்டி அதுப்பற்றி எல்லா தகவல்கள் உங்கள் நினைவுக்
கிடங்கை சென்றடையும், இப்படித்தான் மனஒருமைப்பாடு நடைப்பெறும்.
மனஒருமைப்பாட்டை கழுதைக்கு ஒப்பிடலாம். நாம் எவ்வளவு
அதை தள்ளுகிறோமோ அல்லது இழுக்கிறோமோ, அதற்கு ஏற்றாற்ப் போல் அதனிடம்
எதிர்ப்பு வரும். இங்கேயும் அதே தான் நடைப்பெறுகிறது.
நாம் எவ்வளவு தூரம் கவனத்தை ஒருப் பொருளின் மீது குவிக்க முயல்கிறோமோ
அப்போது தான் மனம் அலைப்பாயத் தொடங்கும். கழுதையை கட்டுப்பாட்டில்
கொண்டுவர அதன் முன்னே காய்கறிகளை போட்டுக் கொண்டே செல்ல வேண்டும், அப்போது தான் அது நாம் எங்கே அழைக்கிறோமோ அந்த இடத்திற்கு வரும். அதே போல், ஒரு பொருளின் மீது கவனத்தைக் குவிக்க விரும்பினால்
முதலில் அதன் மேல் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பின் எல்லாம்
சுலபமாகி விடும். நீங்களும் முயன்று பாருங்கள்.
உணர்வுகளை பயன்படுத்துங்கள்
எதையும் உங்கள் நினைவுக் கிடங்குக்கு எடுத்துச் செல்லுமுன் நீங்கள்
அதைப் பற்றி கவனமாக கேட்க வேண்டும்,
அதை கவனமாக பார்க்கவும் வேண்டும். எதை நீங்கள்
நினைவில் வைக்க விருப்புகிறீர்களோ அதனை முதலில் சற்று பாருங்கள், பின்பு அதையே உங்கள் கர்பனையிலும் பாருங்கள், கேட்டவற்றையும்
கற்பனையிலே கேளுங்கள், நுகருங்கள், சுவையுங்கள்,
முற்றிலுமாக உணருங்கள். அதனால் உங்கள் உணர்வுகளை
கூர்மைப் படுத்தி வையுங்கள். எப்போது உணர்வுகளையும் பயன்படுத்தி
நினைவில் வைக்கிறோமோ, அது பின் எந்த நாளும் எளிதாக மறந்துவிடாது
என்பது தின்னம். அதனால் இனி எதையும் கற்க வேண்டுமானாலும் பின்வரும் உணர்வுகளை
பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்.
1.
பார்த்து
உணர்தல்.
2.
கேட்டு
உணர்தல்.
3.
நுகர்ந்து
உணர்தல்.
4.
சுவைத்து
உணர்தல்.
5.
ஸ்பரித்து
உணர்தல்.
6.
அசைவின்
மூலம் உணர்தல். (அசைவுகளை, நிலைகளை)
நிறங்கள்
மனிதனுக்கான சிறப்பாக கருதப் படுவது கனவுக் காணுதல். நம்மில சிலர் பகல் கனவு
காண்பவராகவும் உள்ளோம். பலர் அவர்கள் கண்ட கனவை பற்றி நண்பர்களிடம்
விவாதமும் செய்வர், ஆராயவும் செய்வார்கள். எப்போதேனும் நீங்கள் கனவில் நிறங்கள் பற்றி நினைத்தது உண்டா?. ஏதேனும் கனவு நிறங்களுடன் கண்டதுண்டா,
இல்லை வெறும் கருப்பு வெள்ளையில் தான் கனவு காண்பீர்களா?.
இனி கனவுக் கண்டால் நன்றாக நினைவுப் படுத்திப் பாருங்கள். நீங்கள் கண்டது,
கருப்பு வெள்ளையா? அல்லது நிறங்களுடனா?
கருப்பு வெள்ளை என்றால் அதனை விழிப்புணர்ச்சியுடன் நிறங்கள் குடுத்துப் பாருங்கள்.
பின் அதில் ஒவ்வொரு சிறிய தகவல்களையும் கவனியுங்கள், மங்களாக உள்ளதா என்று? அப்படி இருந்தால் உங்கள் கற்பனைக்
குதிரையை தட்டிவிடுங்கள். பின் அந்த பகுதியை தெளிவாக பார்க்க முயலுங்கள்.
இனி எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பார்க்கும் நிழற்பட்த்தை,
கனவில் காணும் படத்தையும் உங்களுக்கு பிடித்த நிறங்களால் நிறப்பி மனதிற்கு
பிடித்தார்ப்போல் மாற்றி நினைவில் வைத்துப் பாருங்கள், அது நீங்கா
நினைவாய் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
---
தொடரும்
(anand82kumar)
ஒரு உதாரணத்துடன் சொன்னால், நன்றாக இருக்கும் ஆனந்த்.... படிப்பவர்களுக்கு தொடர்பு படுத்திக்கொள்ள முடியும்....
ReplyDelete