தொடர்புபடுத்துதல் / Association
அனைவருக்கும் கோடு என்றால் என்னவென்று தெரியும். ஒரே அளவுள்ள நான்கு கோடுகளை ஒன்றன்பின் ஒன்றாக இனைத்தால் நாம் பெருவது ஒரு சதுரம். அதே ஆறு சதுரங்களை இனைத்தால், நாம் பெறுவது கனசதுரம் (Cube). இது எவ்வளவு எளிமையாக புரிகின்றதல்லவா? ஆனால் கோடு மற்றும் சதுரம் என்பதை பற்றி தெரியாமல் யாராலும் கனசதுரம் பற்றி அறிந்து கொள்ள முடியாது.
இந்த
எளிய வடிவியல் (geometry) உண்மையை நாம்
வாழ்க்கையிலும் கானலாம். நமக்கு தெரியாது விஷயத்தை தெரிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி கற்றுக்கொள்கிறோம், நினைவிலும் வைத்துக் கொள்கிறோம். இவ்வாறு இல்லாமல் அறிவைப்பெற நமக்கு வேறு வழியேயில்லை.
மேற்கூறிய உண்மையை நீங்கள் எளிதில் உணர ஒரு உதாரணங்கள் பார்ப்போம். நீங்கள் சமஸ்கிருதம் கற்க
நினைத்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தண்ணீர் என்பதை சமஸ்கிருதத்தில் ஜலம் என்று அழைப்பர். நீங்கள் தெரிந்த தண்ணீர் என்ற வார்த்தை ஜலம் என்ற தெரியாது வார்த்தையுடன் எவ்வளவு திடமாக அழுத்தமாக தொடர்பு ஏற்படுத்தி நினைவு வைத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அந்த புதிய வார்த்தை நமக்கு வேண்டிய வேளையில் நினைவுக்கு வரும். தண்ணீர் ஜல் ஜல் என்று சப்தம் ஏற்படுத்தும் என்று நாம் தொடர்பு ஏற்படுத்தி நினைவு வைத்து கொள்வோம். இந்த தொடர்பு ஒருமுறை மனதில் நல்ல ஆழமாக பதிய வைத்து விட்டால் போதும். இனி நம் வாழ்நாளில் எப்போது வேண்டும் என்றாலும் நம் நினைவு பெட்டகத்தில் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அதுவும் பெரும் சிரத்தை இல்லாமல்.
நாம்
பெரும்பாலும் இந்த தொடர்பு சங்கிலியை விழிப்புணர்வு இல்லாமல் செய்கிறோம், அதனால் தான் நமக்கு தேவையான வேளையில் நம் நினைவுக்கு வருவதில்லை. ஆகவே தொடர்பு சங்கிலி எளிமையாகவும் ஆழமாகவும் இருப்பது நல்லது. இவ்வாறான சங்கிலியை விழிப்புணர்வுடன் ஏற்படுத்திக் கொண்டால் போதுமானது. நம் மனதில் அது நிலையாக தங்கி விடும். பின் தேவையான தருணத்தில் நம் முயற்சி இல்லாமல் அது நம் நினைவுக்கு வந்து விடும்.
நினைவாற்றல் மேல் நம்பிக்கை / Confidence in Memory
நாம்
எதையும் செய்யும் முன்
நம்
நினைவாற்றலின் மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். பின் வரும் வாசகத்தை நினைவில் ஆழமாக உழுது பதியனிடுங்கள்.
” என் மூளை தான் இந்த உலகில் உள்ள அனைத்து கனினியையும் விட மிக சிறந்த்து”
நாம் ஒரு விஷயத்தை
நினைவு வைக்க விரும்பா விட்டால், அது கண்டிப்பாக நினைவில் நில்லாது. நாற்பதைந்து வயதானவர்களை
நீங்கள் இவ்வாறு சொல்வதை கவனித்திருப்பீர்கள். ‘மன்னிக்கவும், எனக்கு ஞியாபக மறதி அதிகமாய்
விட்ட்து (அ) நான் எவ்வளவு நினைவுப்படுதியும் உங்கள் பெயர் நினைவுக்கு வரவில்லை”. இந்த
வாசகத்தை அந்த நபர் திரும்ப திரும்ப சொன்னால், அது அவர் நினைவாற்றலை இழந்து கொண்டிருக்கிறார்
என்று தான் அர்த்தம்.
நாம் தினம் படுக்கையில்
இருந்து எழும்முன் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டிய வாசகம் ”நான் என் நினைவாற்றல்
மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளேன், என்னால் கனினியை விட நன்றாக பணிபுரிய முடியும்”.
நம் நினைவாற்றலின் மேல் நம்பிக்கை வளர செய்ய நமக்கு நாமே திரும்ப திரும்ப நம்பிக்கையுடன்
சொல்லிக் கொள்வது தான்.
--
(தொடரும்)
anand82kumar
அப்போ முதல் காதல், ஃபிகர் மட்டும், வாங்கிய அடிகள் எப்படி மறக்காம இருக்கு....
ReplyDeleteஅவ்வப்போது நாம் அந்த உருவங்களை வேறொருவருடன் தொடர்பு படுத்தி நினைவுகளை அசைப்போடுகிறோம்
ReplyDeleteமேலும் நாம் விழிப்புணர்வுடனே அடிவாங்குவதால் தான் மறக்காமல் இருக்கிறோம்......!