Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Tuesday, January 29, 2013

படித்ததில் பிடித்தது - 10

இந்த நேரத்தில் நம்ம உடம்பு என்ன செய்யும்.....



எத்தனை கோடி , கோடியா நாம சம்பாதிச்சாலும், உடல் நலத்தோட இல்லைனா, சவலைப் புள்ளை மாதிரி,எல்லாத்தையும் ஏக்கத்தோட பார்த்து , பார்த்து பெரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...

நம்ம உடம்பை பத்தி , நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்... எதை சரி பண்ணலாம்னு செக் பண்ணிக்கோங்க....
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டு சுழன்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.


விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.

இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம்இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.


விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.
காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்
மலச்சிக்கல் உள்ளவர்கள்இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தைஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.


காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள்.  இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.


காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும். ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.


முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.
இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.


பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம்
இந்த நேரத்தில்மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.


பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம். மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.


இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும். ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவுஉணவுக்கு உகந்த நேரம் இது.


இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை,
டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.


இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.


இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.
இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும்சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

Tuesday, November 27, 2012

படித்ததில் பிடித்தது - 9

நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.


சீசரியன், இந்த ஆப்பரேசன முதன்முதலில் செய்தவரே சீசர் தான் ....
அதனால் தான் அந்த பெயர் வந்தது ..... அதுமட்டும் அல்ல உலக அழகி
கிளியோபாட்ரா க்கு தான் சீசர் இந்த ஆப்பரேஷனை செய்தார்


பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.


நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.


கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.


மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.


ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.


மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.


பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.


உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.


ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை


பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.


பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.


பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.


நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.


நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.


யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.


ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.


தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.


முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.


தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

Wednesday, October 31, 2012

படித்ததில் பிடித்தது - 8

நம் கால்நடைகளை காப்போம்




ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.

அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான, ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையை பற்றி நீண்ட
விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை, பிரிட்டிஷாரை சார்ந்திருக்கவும், அவர்களுக்கு சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்திய கால்நடைகள், குற
ிப்பாக, பசுக்கள் தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும். இப்பசுக்களை அழித்துவிட்டால், விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காகவும் ஆங்கிலேயர்களை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக் கொல்லியாகவும் காலம், காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது.பசுக்கள் அழிந்தால், இந்தியர்கள், உரத்திற்கும், பூச்சிக் கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரை சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு, 54 குவிண்டால் அளவுக்கு சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760ல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்ல, பசுவதை கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். முதல் பசுவதைக் கூடம் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு, 30 ஆயிரம் பசுக்கள் வீதம், ஒரு ஆண்டில் ஒரு கோடி பசுக்களை கொன்றார். அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன், இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவு என்ற போர்வையில் கொல்லப்பட்டன.அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள் தொகையை விட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன்மூலம் ஆரோக்கியமான உணவு உற்பத்தி நடந்தது. 1910ம் ஆண்டு நம்நாட்டில், 350 பசுவதைக் கூடம் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததும், நாம் ரசாயன உரத்திற்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.


நம்நாடு சுதந்திரம் அடைந்த பின், பசுமை புரட்சி என்ற பெயரில், பெருமளவு ரசாயன உரங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்கினோம். அதன் பக்க விளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.ஒருமுறை காந்தியிடம், ஒரு பத்திரிகை நிருபர் கேட்ட கேள்விக்கு, அவர் கூறிய பதில், "இந்தியா சுதந்திரம் அடையும் அந்த நாளில், இந்தியாவில் உள்ள அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்' என்றார். 1929ம் ஆண்டு, நேரு ஒரு பொதுக் கூட்டத்தில், "நான் இந்தியாவின் பிரதமரானால், இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்' என்றார்.இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால், 1947க்குப் பின், 350 பசுவதைக் கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் என்ற நிலைக்கு, "முன்னேறி' விட்டோம். இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக் கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றன. டில்லியில் மட்டும், 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குகின்றன. இங்கு மட்டும் நாளொன்றுக்கு, இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.நமது நாட்டு பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள், நல்ல உடல் சக்தியுடன், நோய் எதிர்ப்பு திறன், வெயிலை தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக் கணக்கான பசுக்களை சந்தைகளில் வாங்கி, வதைக் கூடங்களுக்கு அனுப்பி வருகிறது. இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாக செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடம் இருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.

விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தக கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன. கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்து கொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்ற திட்டத்தில், இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.விளைநிலம் குறைந்தால் என்ன, குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலாளர்கள் உள்ளனர். உணவுப் பொருட்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என, அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது, வருங்கால சந்ததிகள் தான்.

அறிவியலாளர்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளி விவரப்படி, நம் நாட்டில் உள்ள, 73 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவிற்கு உடல் உழைப்பை நமக்கு கொடையாக அளிக்கின்றன. இந்த உழைப்பின் மூலம், இதேஅளவு சக்தியை உற்பத்தி செய்ய ஆகும் நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருட்களை சேமிக்கின்றன.இக்கால்நடைகளால் ஒரு ஆண்டுக்கு, 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்கு கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய். இச்சாணம் கிடைப்பதால், 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால், மரங்கள் அதிக அளவிற்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கை சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த, 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால், நமக்கு, 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். அவற்றை இயக்குவதற்கு, 2 கோடியே, 37 லட்சத்து, 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவிவெப்பமயமாதல் அதிகரிக்கும்.இயற்கை நமக்கு தந்த செல்வங்களான, கால்நடைகளை கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை, சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்று, ரசாயன உரம் இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம்.

அதுமட்டுமின்றி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் இறக்குமதி செய்கிறோம்.ஒரு நவீன மாடு வதை கூடத்திற்கு, அதை சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு, இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தண்ணீர் தட்டுப்பாடும், எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம்நாட்டில் இயற்கையின் கொடையாக கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா

Tuesday, September 25, 2012

படித்ததில் பிடித்தது - 7

பெருவெடிப்பின் பெரும் இரகசியமும், கடவுள்துகளும்




“ஹிக்ஸ் போஸானை நாம் கண்டுபிடித்து விட்டோம்” என்று சுவிஸ் நாட்டில் உள்ள ‘சேர்ன்’ (CERN) அமைப்பின் விஞ்ஞானிகளால், 2012ம் ஆண்டு யூலை மாதம் 4ம் திகதி, உத்தி யோகபூர்வமாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. பிரபல இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் கூட, நடக்கும் என சிறிது சந்தேகப்பட்ட சம்பவமாக அந்த அறிக்கை இருந்தது. நம்பவே முடியாததற்குச் சாட்சியாகவும், தீர்க்க முடியாத சிக்கல்களுக்குத் தீர்வாகவும், அறிவியல் உலகின் மைல் கல்லாகவும் அந்த அறிக்கை வெளியாகியிருந்தது. உலகில் உள்ள அனேகர் இதைக் கேள்விப்பட்டதும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள். ஆனால், நம்மில் பலர் இதைப் பார்த்த விதம் வேறு விதமாயிருந்தது. யாருக்கு இந்தச் சம்பவத்தில் எந்தச் சம்பந்தமுமில்லையோ, அவரை முன்னிலைப்படுத்தி செய்திகளும், தகவல்களும் நம்மிடையே பரவின. அவர் வேறு யாருமல்ல, ‘கடவுள்’.

ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கடவுள் அனாவசியமாக நுழைக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். ஹிக்ஸ் போஸானுக்கு, ‘கடவுள் துகள்கள்’ என்று பெயரிட்டு யாரோ ஒருவர் அழைத்ததால், ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டதும், கடவுளே கண்டுபிடிக்கப்பட்டதாகப் பலர் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட தவறான பரப்புரைகள், நல்லதொரு அறிவியல் சம்பவத்தைப் பற்றிய சரியான அறிவை நாம் பெற்றுக் கொள்ளத் தடையாகவும் இருந்தன. மீடியாக்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை பலவிதமான விளக்கங்களும், கருத்துகளும் ஹிக்ஸ் போஸான் பற்றிச் சொல்லப்பட்டன. சரியான கருத்துகளுடன் பலவும், கருத்துகளற்றுச் சிலவும் அவற்றில் இருந்தன. ஆனாலும் சந்தேகங்கள் பல விளக்கப்படாமலே விடப்பட்டிருந்தன. அதனால் அடிப்படையில் இருந்து இந்த விசயத்தை அலசிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. முடிந்தவரை ஹிக்ஸ் போஸானுடன் சம்பந்தப்பட்ட அனைத்து விளக்கத்துடன் இந்தக் கட்டுரையை உங்களுக்குத் தருவதற்கு முயற்சிக்கிறேன். சரி, நாம் ஹிக்ஸ் போஸான் பற்றிய அடிப்படை விசயங்களுக்குப் போகலாம் வாருங்கள்.

இன்றைக்கு சற்றேறக்குறைய 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர்..! மிகமிகமிகச் சிறிய புள்ளியாகச் சுருங்கியிருந்த ‘ஏதோ ஒன்று’ தவிர்க்க முடியாத ஒரு கணத்தில், மிகப்பிரமாண்டமாய் வெடித்துச் சிதறியது. வெடித்துச் சிதறியது என்றால், உங்களால் கற்பனையே பண்ண முடியாத மாபெரும் வெடிப்பு அது. அந்தப் பெருவெடிப்பை ‘பிக் பாங்’ (Big Bang) என்கிறோம். அந்தப் பெருவெடிப்பில் உருவான சக்தியின் பேராற்றல், வெளிச்சப் பிழம்பாய் அனைத்துத் திசைகளிலும் சிதறியது. ஒரு அணுகுண்டு வெடித்தால், அதன் சக்திகள் எப்படி விரி வடையுமோ, அதுபோல பிரபஞ்சமும் விரிவடையத் தொடங்கியது. 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் விரிவடையத் தொடங்கிய பிரபஞ்சம் இன்றும், இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்தக் கணத்திலும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. பல பில்லியன் வருடங்களாக இன்னமும் தொடர்ந்து அது விரிவடைகிறது என்றால், அந்த ஆரம்பப் பெருவெடிப்பு எவ்வளவு வீரியமானது என்பதை நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள்.

'பிரபஞ்சம் இப்போதும் விரிவடைகிறது என்று எப்படித் தெரியும்?’ என்ற கேள்வி தற்சமயம் உங்களுக்கு எழலாம். பூமியில் இருந்து நவீன தொலைநோக்கிக் கருவிகள் மூலம், பிரபஞ்ச எல்லை நோக்கிப் பார்க்கும்போது, அங்கே உள்ள காலக்ஸிகள் (Galaxy) நம்மைவிட்டு விலகிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. பலூன் ஒன்றில், பேனாவின் மூலம் சுற்றிவரப் புள்ளிகளை இட்டு, பின்னர் அந்தப் பலூனைப் படிப் படியாகப் பெரிதாக ஊதும்போது, அதில் உள்ள புள்ளிகள் எப்படி ஒன்றை ஒன்று விட்டு விலகிச் செல்லுமோ, அப்படிப் பிரபஞ்ச எல்லைகளில் இருக்கும் காலக்ஸிகளும் விலகிச் செல்கின்றன. மிகத் தொலைவில் இருக்கும் காலக்ஸிகள் விலகிச் செல்வதை ‘ரெட் ஷிஃப்ட்’ (க்ஷீமீபீ sலீவீயீt) என்னும் ‘செந்நிற ஒளி விலகல்’ முறையால் கணித்திருக்கிறார்கள். ‘ரெட் ஷிஃப்ட்’ என்றால் என்னவென்று நான் இப்போது விளக்கப் போனால் இந்தக் கட்டுரை மிகவும் நீண்டுவிடும். அதனால் உங்கள் வீட்டில் பத்தாம் வகுப்புப் படிக்கும் தம்பியோ, தங்கையோ இருந்தால், அவர்களிடம் ரெட் ஷிஃப்ட் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

13.7 பில்லியன் வருடங்களாக அந்த ஆரம்பப் பெருவெடிப்பின் சக்தி, பிரபஞ்சத்தை இன்னும் விரிவடைய வைத்துக்கொண்டு இருக்கிறது என்று சொல்லும்போது, 13.7 பில்லியன் வருடங்கள் என்பதை, ஒரு மனிதனாக உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாது. இலக்கங்களாக எழுதினாலும் அதன் தாக்கம் புரியாது. அதனால் அதை ஒரு உதாரணத்தின் மூலம் சுலபமாகப் புரிய வைத்தார்கள் விஞ்ஞானிகள். இப்போது நானும் உங்களுக்குப் அதைப் புரியவைக்க முயற்சிக்கிறேன். புரிகிறதா பாருங்கள்.

13.7 பில்லியன் வருடங்களை, ‘ஒரு வருடம்’ என்று கற்பனையாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி 2012ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தால், சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர், 2011ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி, ‘பிக் பாங்’ என்னும் அந்தப் பெரு வெடிப்பு நடந்திருக்கும். நமது சூரியன் 2012ம் வருடம் ஜனவரி மாதம் 1ம் திகதியில்தான் உருவாகியிருக்கும். பூமியில் உயிரினம் தோன்றியது இன்று காலைதான். அதாவது 2012ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி காலை 7 மணிக்கு. இன்று காலை 11 மணிக்கு மனிதன் தோன்றினான். இரண்டு செக்கன்களுக்கு சற்று முன்னர் மோசேயுடன் கடவுள் பேசினார். ஒரு செக்கனுக்கு முன்னர் இயேசு பிறந்தார். இப்போது நான் சொன்னது உங்களுக்குப் புரிந்தால், இதையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! ஒரு வருடத்துக்கு முன்னர் பெரு வெடிப்பில் பிரபஞ்சம் தோன்றியதென்று வைத்துக் கொண்டால், கடவுள் மனிதனுடன் தொடர்பு கொண்டது இரண்டு செக்கன்களுக்கு முன்னர்தான். அதாவது 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய பிரபஞ்சத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் கடவுள் மனிதனுடன் பேசியிருக்கிறார். எவ்வளவு பெரிய இடைவெளி என்று யோசித்துப் பாருங்கள். அதுமட்டுமில்லாமல், பிரபஞ்சம் ஒரு புள்ளியாகச் சுருங்கி இருந்தபோதும், அதற்கு முன்னரும் கடவுள் எங்கிருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன.

“இது என்ன முட்டாள்தனமான கேள்விகள். கடவுள் எங்கிருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேட்பது எவ்வளவு பைத்தியகாரத்தனம். கடவுள் எங்கும் இருப்பவரல்லவா?” இப்படித்தான் நாம் சிந்திப்போம். ஆனால் பிரபஞ்சம் புள்ளியாக ஒடுங்கிய நிலையில் அந்த ‘எங்கும்’ என்ற சொல்லுக்கே அர்த்தம் இல்லை என்கிறது அறிவியல். இடம், காலம், தூரம், வேகம், வெளிச்சம் என எதுவுமே இல்லாத சூனியம் அது. அங்கு ‘எங்கும்’ என்பதுமில்லை, ‘எதுவும்’ என்பதுமில்லை. இதைச் சரியாக நாம் புரிந்தால்தான், மிகமுக்கியமான ஒரு உண்மையை முன் வைத்துத்தான் மேலே உள்ள கேள்விகள் கேட்கப்பட்டன என்று நமக்குப் புரியவரும். அந்த உண்மை என்ன என்பதையும் முடிந்தவரை விளக்குகிறேன்.....!

பிரபஞ்சம் (Universe) என்பது நம்மால் கற்பனையே பண்ண முடியாத அளவு பெரியது. குறுக்கு வெட்டாக 93 பில்லியன் ‘ஒளியாண்டுகள்’ அகலம் இருக்குமென கணிக்கப்பட்டிருக்கிறது (ஒளி ஒரு செக்கனுக்கு 3 இலட்சம் கிலோமீட்டர் செல்லும். இப்படி ஒரு வருசத்துக்கு ஒளி செல்லும் தூரம், ஒரு ஒளியாண்டு எனப்படும்). பூமியிலும், பூமிக்கு வெளியிலும் இரண்டு இடங்களுக்கு இடையில் இருக்கும் தூரத்தை நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. நாம் நடப்பதாக இருந்தாலும், பிரயாணம் செய்வதாக இருந்தாலும் இந்த இடைத் தூரத்தினூடாகத்தான் இயங்க முடியும். உங்கள் காலைத் தூக்கி ஒரு அடி எடுத்து வைக்கும் அளவு இடமாவது இருந்தால்தான், உங்களால் அந்த ஒரு அடி தூரத்தைக் கூடக் கடக்க முடியும்.

இந்த இடைவெளி, பூமியில் இருந்தால் அதைத் ‘தூரம்’ என்கிறோம். அதுவே பூமிக்கு வெளியே இருந்தால் ‘வெளி’ (Space) என்கிறோம். இப்போது கற்பனையாக, நாம் நிற்கும் பூமி படிப்படியாகச் சுருங்கி ஒரு புள்ளியாகி விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் புள்ளியிலேயே நிற்கும் நீங்கள் எங்கு எப்படி நகர முடியும்? நீங்கள் நகர்வதற்கு இடம் என்பதே இல்லாமல் போய்விடுமல்லவா? அதைத் தொடர்ந்து, பூமி மட்டுமல்ல, கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட பிரபஞ்சமே படிப்படியாகச் சுருங்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பிரபஞ்சமே மொத்தமாகச் சுருங்கி ஒரு புள்ளியாகிறது. ஆனால் நீங்கள் மட்டும் முழுமையாக இருக்கிறீர்கள். அப்படியாயின் நீங்கள் நடப்பதற்கோ, நகர்வதற்கோ இடமே அங்கு இல்லாமல் போய் விடுமல்லவா? அங்கு இருப்பது நீங்களும் ஒன்றுமே இல்லாத வெறும் சூனியமும்தான்.

உங்களால் எங்கும் நடக்க முடியாது, நடப்பதற்கு இடம் இல்லை. பார்க்க முடியாது, பார்ப்பதற்குப் பொருளுமில்லை, ஒளியுமில்லை. பேச முடியாது, பேச்சைக் கடத்தும் சாதனம் எதுவும் இல்லை. எதையும் சிந்திக்கவும் முடியாது, சிந்திப்பதற்கு எதுவும் கிடையாது. காரணம், சிந்தனை என்பதே நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள், சம்பவங்கள் சார்ந்ததுதானே! அவை எதுவுமே இல்லையென்றால், சிந்தனைக்கும் இடமில்லை. கீழ், மேல், இடம், வலம் என்ற திசைகள் கூட இல்லை. அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் அங்கு என்ன செய்வீர்கள்? அப்படியே உங்களைக் கோடி ஆண்டுகள் விட்டால் என்ன செய்வீர்கள்? இது போலப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர், அது ஒரு புள்ளியாக ஒடுங்கி இருந்ததல்லவா? கடவுள் எப்போதும் உள்ளவரல்லவா? எனவே பிரபஞ்ச வெடிப்பின்போதும், அதற்கு முன்னரும் கடவுள் எங்கிருந்தார்? என்ன செய்தார் என்ற கேள்விகள் எழுவதில் நியாயம் உண்டு அல்லவா? அறிவியலுடன் இறையியல் மோதும் முக்கிய இடமாக இது இருக்கிறது. இங்கு கடவுளுக்கான ஒரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது.

இந்த சமயத்தில், அதாவது 1964 இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘பீட்டர் ஹிக்ஸ்’ (Peter Higgs) என்னும் இயற்பியல் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்த ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது. ‘ஹிக்ஸ் மெக்கானிசம்’ (Higgs Mechanism) என்னும் பெயரில் அந்த ஆய்வு வெளியிடப்பட்டது. அணுவில் உள்ள துகள்கள் பற்றிய ஆராய்ச்சியின் மிகமுக்கிய கண்டுபிடிப்பாக அது இருந்தது. அந்தக் கண்டுபிடிப்பின்படி, பெருவெடிப்பில்   பிரபஞ்சம் உருவாகிய அதே நேரத்தில் உருவான ஒரு பிரதானமான துகள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அத்துடன் அந்தத் துகள் பிரபஞ்சம் எங்கும் பரவியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. அந்தத் துகளின் பெயர்தான் ‘ஹிக்ஸ் துகள்’ (Higgs Particle) ஆகும். பெருவெடிப்பினால், பிரபஞ்சம் எங்கும் ஹிக்ஸ் துகள்கள் பரவி, ‘ஹிக்ஸ் ஃபீல்ட்’ (Higgs Field) என்னும் ஒரு பெருவெளி உருவாகியிருக்கிறது என்று பீட்டர் ஹிக்ஸின் ஆராய்ச்சி முடிவு சொன்னது. இவை எல்லாமே சாத்தியமான ஒன்றுதான் என்ற வகையில் சொல்லப்பட்டதேயல்லாமல், யாராலும் அதை இருக்கிறது என்று உறுதியாகக் காட்ட முடியவில்லை. பீட்டர் ஹிக்ஸ், அவரது அறிக்கையை வெளியிட்டதன் பின்னர், ஹிக்ஸ் துகள் இருக்கின்றன என்று கற்பனையாக வைத்துக் கொண்டு, அதுவரை தீர்க்க முடியாத பௌதிகவியல், கணிதச் சமன்பாடுகளை எல்லாம் சரி பார்த்தபோது, எல்லாமே சுலபமாகத் தீர்க்கப்படக் கூடியவையாக மாறின.

உதாரணமாக, ஹிக்ஸ் துகள்களின் எடைக்கு, கணிதச் சமன்பாடுகளில் பயன்படுத்துவது போல, ஆங்கில எழுத்தான X என்பதைக் கொடுத்து சமன்பாடுகளைச் சமப்படுத்திப் பார்த்தபோது, அனைத்தும் சுலபமாகத் தீர்வுக்கு வந்தன. ஆனால் இவையெல்லாம் ஹிக்ஸ் துகள்கள் இருக்கலாம் என்னும் பீட்டர் ஹிக்ஸின் தத்துவப்படி நடந்ததேயல்லாமல், அது இருக்கிறது என்று நிரூபிக்க முடியவில்லை. இருந்த சூழ்நிலைகளைப் பொறுத்தவரை அப்படி ஒரு துகள் இருக்கிறது என்றே அனைத்து விஞ்ஞானிகளும் நம்பிக்கையான ஒரு முடிவுக்கு வந்தனர். ஆனால் நிரூபிக்காத எதுவும் அறிவியலில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அன்றிலிருந்து ஹிக்ஸ் துகளைத் தேடுவதே விஞ்ஞானிகளின் பெரும் நோக்கமாகவும் ஆயிற்று. ஹிக்ஸ் துகளைக் கண்டுபிடித்துவிட்டால், பிரபஞ்ச வெடிப்பின் ஆரம்ப இரகசியம் முழுமையாகத் தெரிந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் நம்பினர்.
லியோன் லேடெர்மான் (Leon Lederman) என்பவர், பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கும் அதைத் தொடர்ந்து உருவான ‘ஹிக்ஸ் ஃபீல்டுக்கும்’ காரணமாக இருந்த ஹிக்ஸ் துகள்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கி, ஒரு அறிவியல் புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத்தின் பெயர் “The God Particle-If the Universe Is the Answer, What Is the Question?” என்பதாகும். இந்தப் புத்தகத்தில்தான் முதன்முதலாக ஹிக்ஸ் துகள்களுக்கு ‘கடவுள் துகள்கள்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தகம் வெளிவந்தது முதல் ஹிக்ஸ் துகள்களைக் ‘கடவுள் துகள்கள்’ (God Particles) என்று அனைவரும் அழைக்கத் தொடங்கினார்கள். கடவுளின் பெயர் இங்கு வந்து நுழைந்ததன் காரணம் இதுதான். இது தவிர்த்து கடவுளுக்கும் அந்தத் துகளுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

இனி ஹிக்ஸ் துகள்கள் பற்றியும், ஹிக்ஸ் துகள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம். இவற்றை நாம் விரிவாகப் பார்ப்பதற்கு இயற்பியலில் இரண்டு முக்கிய விசயங்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அவை இரண்டுமே பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கும் அனைத்துக்கும் அடிப்படையானவை. அதில் ஒன்று ‘துகள்கள்’ (Particles), மற்றது ‘விசைகள்’ (Forces). இவை இரண்டும்தான் இந்தப் பிரபஞ்சத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. இவை இரண்டையும் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டால் மட்டுமே நமக்கு ஹிக்ஸ் துகள்கள் பற்றிப் புரிவதற்கான அடிப்படை அறிவு கிடைக்கும். அதனால் இனி வருபவையெல்லாம் இயற்பியலில் சிக்கல் வாய்ந்தவையாக இருக்கும். படிக்கும்போது மனதைத் தளர விடாமல் தொடர்ந்து படியுங்கள்.

உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டீர்களானால், அவை மூலக்கூறுகளால் (Molecule) ஆனவையாக இருக்கும். இந்த மூலக்கூறுகள், அணுக்களால் (Atom) உருவாக்கப்பட்டிருக்கும். அணுக்கள், இலத்திரன் (Electron) மற்றும் அணுக்கருவால் (Nucleus) உருவானவை. அணுக்கரு, புரோட்டான் (Proton), நியூட்ரான் (Neutron) ஆகியவற்றால் உருவானது. புரோட்டானும், நியூட்ரானும் குவார்க் (Quark) என்பவற்றால் ஆனவை. இதுவரை இன்றுள்ள நவீன இயற்பியல் கண்டுபிடித்திருக்கிறது. அதாவது, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொருளைப் பிரித்தால் வரும் மிகச் சிறிய பகுதியை அணு (Atom) என்று சொன்னார்கள். அந்த அணுவைப் பிரிக்கவே முடியாது என்றும் நினைத்தார்கள் (அணுவைத் துளைத்து அதனுள் ஏழுகடலை அவ்வையார் நுழைத்தது தமிழர்களுக்கேயான தனிக்கதை). ஆனால் அந்த அணுவையும் பிளந்து அதனுள் அணுக்கருவும் இலத்திரனும் உண்டு எனக் கண்டுபிடித்து, பின்னர் அந்த அணுக்கருவைப் பிளந்து அதனுள் புரோட்டானும், நியூட்ரானும் இருக்கின்றன என்று கண்டுபிடித்து, அதன் பின்னர் அந்தப் புரோட்டானையும், நியூட்ரானையும் கூடப் பிளந்து, அவை இரண்டுமே குவார்க் என்பதால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். நாளைய நம் சந்ததியினர் இந்தக் குவார்க்கையும் பிளந்து அதனுள் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம். மேலே படத்தில், ஒரு ஈயிலிருந்து குவார்க் வரை எப்படி பிரிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.

இயற்பியலில் குவார்க் போன்றவற்றை துகள்கள் (Particles) என்று அழைக்கிறார்கள். தற்சமயம் அறியப்பட்டவரையில் பிரிக்க முடியாத மிகச் சிறிய பகுதியாகத் துகள்களைக் கருதுகிறார்கள். துகள்களில், குவார்க்குகளுடன் இலத்திரனும் அடங்கும். காரணம், புரோட்டானையும், நியூட்ரானையும் பிரிக்க முடிந்த நம்மால் இலத்திரனைப் பிரிக்க முடியவில்லை. எனவே இலத்திரனும் ஒரு பிரிக்க முடியாத துகளாகவே கருதப்படுகிறது. இங்கு புரோட்டானையும், நியூட்ரானையும் எடுத்துக் கொண்டால், அதில் புரோட்டான் ‘+’ மின்னேற்றத்தையும் (Positive Electric charge), நியூட்ரான் எந்தவித ஏற்றமும் இல்லாமலும் இருக்கின்றன. ஆனால் இவை இரண்டுமே குவார்க்குகளினால் ஆனவை. எனவே இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கலாம் என்று பார்ப்பதற்காக குவார்க்குகளை ஆராய்ந்தால், குவார்க்குகளில் மொத்தமாக 6 வகை குவார்க்குகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் இரண்டு வகை குவார்க்குகள் மட்டும் புரோட்டானிலும், நியூட்ரானிலும் இருப்பது தெரிந்தது. இந்த இருவகை குவார்க்குகளும் அமைந்திருக்கும் முறைதான் புரோட்டானுக்கும், நியூட்ரானுக்கும் வித்தியாசத்தைக் கொடுக்கின்றன.

குவார்க்குகளில் மொத்தமாக 6 வகை குவார்க்குகள் உண்டு என்று கண்டுபிடித்துள்ளனர் எனச் சொல்லியிருந்தேன். அந்த ஆறு குவார்க்குகளின் பெயர்களையும் தமிழில் தருவதில் சிரமம் இருப்பதால், அவற்றை ஆங்கிலத்திலேயே தருகிறேன். 1. Up Quark 2. Down Quark, 3. Charm Quark, 4. Strange Quark, 5. Top Quark, 6. Bottom Quark என்பவைதான் அந்த ஆறு வகை குவார்க்குகளும் ஆகும். இதில் Up குவார்க்குகளும், Down குவார்க்குகளும் புரோட்டானிலும், நியூட்ரானிலும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் மூன்றாக, புரோட்டானில் இரண்டு Up குவார்க்குகளும், ஒரு Down குவார்க்கும், நியூட்ரானில் இரண்டு Down குவார்க்குகளும், ஒரு Up குவார்க்கும் உண்டு. இதுவே இவையிரண்டுக்கும் வித்தியாசத்தைக் கொடுக்கின்றன. இதைத் தொடர்ந்து ஆராய்ந்தபோது, புரோட்டானுக்குள்ளும், நியூட் ரானுக்குள்ளும் இருக்கும் மூன்று குவார்க்குகளும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்தார்கள். இந்த இணைப்பு, அணுக்கருவுக்குள் இருக்கும் புரோட்டானும், நியூட்ரானும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாமல் இணைக்கப்பட்டிருப்பதைப் போல இருந்தது. இதை மேலும் ஆராய்ந்தபோது, விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமான ஒரு விடை கிடைத்தது. குவார்க்குகளை எந்தவிதமான சக்தி ஒட்ட வைத்திருக்கிறதோ, அதேவிதமான சக்திதான் புரோட்டானையும் நியூட்ரானையும் ஒட்ட வைத்திருக்கிறது என்று தெரிய வந்தது. அத்துடன், அப்படி ஒட்டவைத்திருப்பது சக்தி மட்டுமல்ல, அதுவும் ஒரு துகள்தான் என்றும் தெரிந்தது. அதன் மூலம் இயற்பியலில் முக்கிய ஒரு துகளாக அது பதிவு செய்யப்பட்டது. அந்தத் துகளின் பெயர் ‘குளூவான்’ (Gluon). அதாவது இரண்டு குவார்க்குகளை இணைப்பது ஒரு விசை (சக்தி) என்று நினைத்தபோது, அந்த விசையைக் கடத்தும் துகளாக இந்தக் குளுவான் தொழில்படுவது தெரிந்தது.

இந்தச் சமயத்தில்தான் ஐன்ஸ்டைனும் (Einstein), இந்திய விஞ்ஞானியான சத்தியேந்திரநாத் போஸும் (Satyendranath Bose) சேர்ந்து, Bose-Einstein Statustucs என்னும் இயற்பியல் விதி ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அந்த விதியின்படி உலகில் உள்ள அனைத்து ஈர்ப்பு விசைகளும் துகள்களாலேயே கடத்தப்படுகின்றன என்னும் முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். உதாரணமாக புவியீர்ப்பு (Gravity) என்பது ஒரு ஈர்ப்பு விசை. இந்த விசை மூலம் நாம் பூமியால் ஈர்க்கப்படுகிறோம். அதுமட்டுமில்லாமல் சூரியனின் ஈர்ப்பு விசையால் பூமி ஈர்க்கப்படுகிறது. சந்திரன், பூமியால் ஈர்க்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரங்கள் முழுவதும் அந்த ஈர்ப்பு விசை பரவியிருக்க வேண்டும். காற்று உள்ள வெளியானாலும், காற்றில்லா வெளியானாலும் அந்த விசை தொடர்ந்து இருக்க வேண்டும். அதை ஆராய்ந்து பார்த்தபோது, கிராவிட்டான் (Graviton) என்னும் துகள் சந்திரனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள வெளியில் முழுமையாகப் பரவி, இரண்டினதும் ஈர்ப்புவிசைகளையும் கடத்தி, இணைத்து வைத்திருக்கிறது என்ற முடிவு கிடைத்தது. அதே கிராவிட்டான்கள்தான் நம்மையும் பூமியில் ஒட்ட வைத்துக் கொண்டிருக்கின்றன. துரதிர்ஷ்ட-வசமாக கிராவிட்டான் பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. இது போலவே ‘ஃபோட்- டான்’ (Photon), Z, -W, +W என்னும் துகள்களும், விசைகளைக் கடத்துகின்றன என்று கண்டுபிடித்தார்கள். அன்றிலிருந்து விசைகளைக் கடத்தும் துகள்களை, விஞ்ஞானி போஸ் அவர்களின் பெயரில் ‘போஸான்கள்’ (Bosons) என்று அழைத்தார்கள்.

துகள்கள் என்றால் அவற்றிற்கு எனச் சில தனித் தன்மைகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு துகள்களுக்கும் நிறை, மின்னேற்றம், சுழற்சி என்பன அவற்றின் தன்மைக்கு ஏற்ப இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. துகள்களில் சில எடையுடனும் இருந்தன. எடையில்லாமலும் இருந்தன. துகள்களின் எடை ‘மெகா எலெக்ட்ரான் வோல்ட்’ (விமீரீணீமீறீமீநீtக்ஷீஷீஸீ க்ஷிஷீறீt- விமீக்ஷிMegaelectron Volt-MeV) என்னும் அளவீட்டால் அளக்கப்பட்டது. இந்தத் தன்மைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு மேலும் பல துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இலத்திரனின் சாயல்கள் கொண்ட சில துகள்களும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுக்கு லெப்டான்கள் (Leptons) எனப்பெயரிட்டுப் பிரித்தார்கள். அதில் ஆறு விதமான லெப்டான்கள் பிரதானமாகக் கண்டுபிடிக்கப்பட்டன. அவை 1. Electron, 2. Muon, 3. Tau, 4. Electron Nuetrino, 5. Muon Nuetrino, 6. Tau Nuetrino என்பனவாகும். இயற்பியலை இலகுவானதாகக் கொண்டுவர, மொத்தமாகக் கண்டுபிடிக்கப்பட்ட துகள்களான ஆறு குவார்க்குகளையும், ஆறு லெப்டான்களையும், நான்கு போஸான்களையும் சேர்த்து ஒரு அட்டவணை உருவாக்கப்பட்டது. அந்த அட்டவணை ‘ஸ்டாண்டார்ட் மாடல்’ (Standard Model) என்று அழைக்கப்பட்டது.

இந்த அட்டவணையைத் தயாரித்தவுடன் பிரச்சினை முடிந்துவிடவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட துகள்கள் ஒருபுறம் இருக்க, கண்டுபிடிக்கப்படாமல் பல துகள்கள் இருக்கின்றன என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்குத் தோன்றியது. அந்தச் சந்தேகத்துக்கு அடிப்படைக் காரணமாக ஒரு விசயம் இருந்தது. ஒவ்வொரு சமயங்களிலும் அணுக்கருவின் எடையை மொத்தமாக அளக்கும்போது வரும் எடையையும், அதில் உள்ள துகள்களின் எடைகளைத் தனித்-தனியே கூட்டும்போது வரும் எடையையும் சரிபார்க்கையில், கிடைத்த எடை வித்தியாசம் மிகவும் அதிகமாக இருந்தது. வித்தியாசப்பட்ட எடை மெகா எலெக்ட்ரான் வோல்ட்டுகள் (MeV) இல்லாமல், ஜிகா எலெக்ட்ரான் வோல்ட்டுகள் (GeV) எனப் பெரியளவில் வித்தியாசப்பட்டன. குறிப்பாக 100 நிமீக்ஷி க்கும் அதிகமான எடை வித்தியாசப்பட்டது. இதனால், அளக்கப்பட முடியாத ஏதோ துகள்கள் அங்கே இருக்கின்றன, ஆனால் அவற்றை அறிய முடியவில்லை என்று சந்தேகம் உருவாகியது. ஏன் அப்படி இருக்கிறது என விஞ்ஞானிகள் தவித்தபோது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘பீட்டர் ஹிக்ஸ்’ என்பவர் ‘ஹிக்ஸ் மெக்கானிசம்’ என்னும் ஆய்வை வெளியிட்டார். அந்த ஆய்வில் அவர், ஈர்ப்பு விசைகளைக் கடத்திக் கொண்டு செல்லும் போஸான்கள் இருப்பது போல, எடையையும் கடத்திக் கொண்டு செல்லும் துகள்களும் உண்டு என்றார். அதை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகள், அந்தத் துகள்களுக்கு ‘ஹிக்ஸ் துகள்கள்’ என்று பெயரிட்டனர். போஸான்கள் விசையைக் கடத்துவது போல, ஹிக்ஸ் துகள்கள் எடையைக் கடத்துகின்றன. எனவே ஹிக்ஸ் துகள்களும் ஒரு வகை போஸான்கள்தான் என்ற முடிவுக்கு வந்தனர். அதனால் அது ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்றும் அழைக்கப்பட்டது. ஹிக்ஸ் போஸான் எடையைக் கடத்துகிறது என்று சொன்னால் போதுமா? அது எப்படிக் கடத்துகிறது என்றும் சொல்ல வேண்டுமல்லவா? அதனால், ஹிக்ஸ் இதை எப்படி விளக்கினார் என்பதை இப்போது நாம் பார்க்கலாம். அதற்கு ‘விசைகள்’ பற்றி சிறிது நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். விசைகளும் மேலே சொல்லப்பட்ட துகள்களைக் கொண்டே உருவாகின்றன.

பூமியிலும், பிரபஞ்சத்திலும் அடிப்படை விசைகளாக (Force) மொத்தமாக நான்கே நான்கு விசைகளே இருக்கின்றன. 1. மின்காந்த விசை (Electromagnetic Force-EM), 2. திடமான அணுவிசை (Strong Nuclear Force-S). 3. திடமற்ற அணுவிசை (Weak Nuclear Force-W), 4. புவியீர்ப்பு விசை (Gravitational Force-G) என்பவைதான் அந்த நான்கும். இந்த நான்கு விசைகளுமே பூமியில் உள்ள அனைத்து விசைகளுக்கும் ஆதாரமானவை. இதில் மின்காந்த விசை ஃபோட்டோன் துகள்களாலும், திடமான அணுவிசை குளுவான்களினாலும் திடமற்ற அணுவிசை போஸான்களினாலும், புவியீர்ப்பு விசை கிராவிட்டான்களினாலும் கடத்தப்படுகின்றன. இந்த நான்கு விசைகளும் இப்போது பிரிந்திருந்தாலும், பெருவெடிப்பிற்கு முன்னர் பிரபஞ்சம் ஆரம்பப் புள்ளியாக, ஒரே புள்ளியாக இருந்தபோது, இந்த நான்கு விசைகளும் ஒன்றாகச் சேர்ந்தே இருந்திருக்கின்றன. இதை எந்த விஞ்ஞானிகளும் மறுக்கவில்லை. இந்த நான்கு விசைகளும் ஒன்றாக இருந்தபோது, இவை இயற்பியல் விதிகளின்படி ஒரே சமன்பாட்டின்கீழ் (Equation) அடங்கியிருக்க வேண்டும். அதாவது இவையெல்லாவற்றையும் சேர்த்து ஒரே இயற்பியல் சமன்பாடு இருந்திருக்க வேண்டும். நான்கு விசைகளும் ஒரே சமன்பாட்டில் வருவதை Theory of Everything என்கிறார்கள். பிரபஞ்ச வெடிப்புக்கு முன்னால் ஒன்றாக இருந்த சமன்பாட்டை மீண்டும் இப்போது கொண்டு வருவதற்கு விஞ்ஞானிகள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தடையாக இருந்தவைதான் ஹிக்ஸ் போஸான் போன்ற கண்டுபிடிக்கப்படாத துகள்கள். ஹிக்ஸ் போஸான் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஆரம்ப வெடிப்பின்போது இருந்த அனைத்தையும் கண்டுபிடித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்த நான்கு விசைகளும் ஒன்றாக இருந்ததை வைத்துக் கொண்டு ஹிக்ஸ் இப்படிச் சொன்னார். “பிரபஞ்ச வெடிப்பின்போது நான்கு விசைகளும் ஒன்றாக இருந்தன. அப்போது குவார்க்குகளும், பல சக்தித் துகள்களும் இந்த நான்கு விசைகளுடன் இணைந்து ஒரே புள்ளியாய் இருந்தன. ஒரு குறித்த கணத்தில் ஈர்ப்புவிசையும், திடமான அணுவிசையும் அவற்றிலிருந்து விலகின. அதனால் உருவான உந்துதலால் அங்கே ஒரு பிரமாண்டமான வெடிப்பு ஏற்பட்டது. அப்போது ஈர்ப்புவிசையிலிருந்தும், திடமான அணுவிசையிலிருந்தும் 6 வகை குவார்க்குகள் உருவாகின. பின்னர் மின்காந்தவிசையும், திடமற்ற அணுவிசையும் பிரிந்தன. அவற்றிலிருந்து ஆறுவகை லெப்டான்கள் உருவாகின. தொடர்ச்சியாக நடந்த தாக்கங்களினால் ஹிக்ஸ் போஸான்கள் உருவாகி, அவை பரவி, ‘ஹிக்ஸ் ஃபீல்டை’ உருவாக்கின. இந்த ஹிக்ஸ் போஸான்கள் அதிக எடையுள்ளவை. பிரபஞ்ச வெடிப்பினாலும், அதன் பின்னர் நடைபெற்ற தாக்கங்களினாலும் உருவான ஏனைய துகள்கள் அனைத்தும் ஹிக்ஸ் ஃபீல்டினூடாகச் செல்லும்போது, அந்தத் துகள்களில் ஹிக்ஸ் போஸான்களும் ஒட்டிக்கொள்ள, அந்தத் துகள்கள் எடையைப் பெற்றன.
எடை அதிகமாக இருந்தாலும், அளவில் கண்டுபிடிக்கவே முடியாதபடி மிகச் சிறியதாக இருந்தது ஹிக்ஸ் போஸான். உடையை அணிந்துகொண்டு ஆற்றின் குறுக்கே நாம் நடந்து கடந்துவிட்டு, நம் ஆடையைப் பார்த்தால் ஆடை முழுவதும் நனைந்திருக்குமல்லவா? ஆனால் மொத்தமாக நனைந்த உடையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால், அந்த உடையில் தனித்தனியாக நீரின் மூலக்கூறுகளாக H2O ஒட்டியபடி இருக்குமல்லவா. இது போலத்தான் ஹிக்ஸ் போஸானும். ஆற்றில் H2O மூலக்கூறுகள் இருப்பது போல ஹிக்ஸ் ஃபீல்டில், ஹிக்ஸ் போஸானும் இருக்கும். அதனூடே துகள்கள் சென்றால், நீர் ஆடையில் ஒட்டிக் கொள்வது போல ஹிக்ஸ் போஸான்களும் ஒட்டிகொள்ளும். நீரில் நனைந்த பின்னர் ஆடையின் எடை அதிகமாக இருப்பது போல, ஹிக்ஸ் ஃபீல்டினூடாகச் சென்ற துகள்களை அளக்கும்போது எடை அதிகமாக இருக்கும். நீர் கண்ணுக்குத் தெரியும். ஹிக்ஸ் போஸான் கண்ணுக்கும் தெரியாது, அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. ஆனாலும் அதைக் கண்டுபிடித்தே தீர்வது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தார்கள். அதற்கென ஒரு கருவியை உருவாக்கி, அதன்மூலம் கண்டுபிடிக்க முடிவும் செய்தனர். அப்படி உருவாக்கப்பட்ட கருவியின் பெயர்தான் ‘பெரிய ஹாட்ரோன் மோதி’ (Large Hadron Collider) என்பதாகும்.


ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 20 நாடுகள் இணைந்து, ஜெனீவாவில் அணு ஆராய்ச்சிக்கென அமைத்த ஒரு அமைப்பு தான் ‘சேர்ன்’ (CERN). பிரெஞ்சு மொழியில், Conseil Européen pour la Recherche Nucléaire என்பதுதான் CERN என்பதன் விரிவு. அதாவது ஆங்கிலத்தில் European Organization for Nuclear Research. இந்த அமைப்பினூடாக சுவிஸ்ஸுக்கும், பிரான்ஸுக்கும் உள்ள எல்லையில், 27 கிலோ மீட்டர் அளவுள்ள வட்டப்பாதையில், நூறு மீட்டர் நிலத்துக்குக் கீழே, LHC என்று அழைக்கப்படும் Large Hadron Collider என்னும் மாபெரும் கருவி அமைக்கப்பட்டிருக்கிறது. 9 மீட்டர் நீளமான பிரமாண்டமான குழாய் போன்ற அமைப்புள்ள 1200 காந்தங்கள் இந்த வட்ட வடிவப் பாதையில் நிறுவப்பட்டன. அந்தக் காந்தக் குழாயின் நடுவே அமைந்த 6 சென்டிமீட்டர் அகலமான மிகச் சிறிய குழாயினூடாக இரண்டு புறமும், புரோட்டான்களைச் செறிவாக்கி ஒளியின் வேகத்தில், 99.9999991 வீத பங்கு வேகத்தில், எதிர்த்திசைகளில் மோதும் வகையில் சுற்றவிடப்பட்டன. இப்படி அனுப்பப்படும் புரோட்டான்கள், ஹாட்ரான்கள் (Hadron) எனப்படும். அமைக்கப்பட்ட காந்தக் குழாய்களினால் முடுக்கிவிடப்படும் புரோட்டான்கள் அதியுயர் வேகத்துடன் ஒன்றுடன் ஒன்று மோதும். ஏதோ ஒரு நிலையில் அங்கே மிகச்சிறிய அளவுள்ள ஹிக்ஸ் போஸான்கள் மோதும் சாத்தியங்கள் வரும்போது, அவை பெரிதாக சக்தியை வெளிப்படுத்தி வேறு பல துகள்களாகச் சிதைவடையும். அப்படி மோதும்போது ஏற்படுபவை பலவிதமாகப் பதிவுசெய்யப்பட்டு அவதானிக்கப்படும். ஆனால், பல தடவை இந்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டபோதும் அதில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. அதே நேரம் தோல்விகளும் அதிக காலம் நீடிக்கவில்லை. 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் திகதி நம்பவே முடியாத அந்தச் சம்பவமும் சரித்திரத்தில் நடந்தேறியது.

எந்த நிறையுடன் ஹிக்ஸ் போஸானை விஞ்ஞானிகள் எதிர்பார்த்தார்களோ அதைவிடச் சிறிது அதிகமான எடையான 125.3 ஜிகா எலெக்ட்ரான் வோல்ட் அளவுகளில் துகள்கள் மோதிச் சிதறின. இதன்மூலம் ஹிக்ஸ் போஸானை ஒத்த துகள்கள் உண்டு என்பதை அறிவியல் உலகம் நிரூபித்துக் காட்டியது. ஆனாலும் இது இந்த இடத்தில் ஒரு ஆரம்பம்தான். இதன் தொடர்ச்சியாக மேலும் பல துகள்கள் கண்டுபிடிக்கப்படும் என்ற திடமான நம்பிக்கைக்கு விஞ்ஞானிகள் வந்துவிட்டார்கள்.

பிரபஞ்சத்தின் ஆரம்ப வெடிப்பின்போது உருவாகி, பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கும் சக்திகள் பற்றியே விஞ்ஞானிகளின் கவனம் இப்போது செல்கின்றது. பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் நட்சத்திரங்கள் அனைத்தைச் சேர்த்தாலும் பிரபஞ்சத்தின் 0.4 சதவீதத்துக்கு குறைவாகவே இருக்கின்றன. அதில் 3.6 விகிதம் நெபுலாக்கள் என்று சொல்லப்படும் வாயுக்களும் இருக்கின்றன. எஞ்சிய 96 வீதத்தில் 23 வீதம் Dark Matter என்னும் கரும்பொருளும், 73 வீதம் Dark Energy என்று சொல்லப்படும் கருப்பு சக்தியினாலும் நிரம்பியிருக்கிறது என்று நம்பப்படுகிறது. ஹிக்ஸ் போஸான் இருக்கிறது என்று நம்பப்பட்டு, அது இருக்கிறது என்று நிரூபித்த காரணத்தினால், இவையும் கட்டாயம் இருக்கும் என்ற முடிவுக்கே விஞ்ஞானிகள் வந்திருக்கின்றனர். ஆனால் இந்தக் கரும்பொருள் பற்றியும், கருப்பு சக்தி பற்றியும் எந்த விளக்கமும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. அவை இருக்கின்றன என்று தெரிகிறது. ஆனால் அவை இருப்பதைக் கண்டுபிடிப்பதுதான் இனி விஞ்ஞானிகளின் அடுத்த பயணமாக இருக்கும்.

- ராஜ்சிவா




Tuesday, August 14, 2012

படித்ததில் பிடித்தது - 6

“Why We Shout In Anger” 






A Hindu saint who was visiting river Ganges to take bath found a group of family members on the banks, shouting in anger at each other. He turned to his disciples smiled and asked. “Why do people shout in anger shout at each other?” Disciples thought for a while, one of them said, ‘Because we lose our calm, we shout.’ ‘But, why should your shout when the other person is just next to you? You can as well tell him what you have to say in a soft manner’. Asked the saint Disciples gave some other answers but none satisfied the other disciples.


Finally the saint explained.. ‘When two peoples are angry at each other, their hearts distance a lot. To cover that distance they must shout to be able to hear each other. The angrier they are, the stronger they will have to shout to hear each other to cover that great distance. What happens when two people fall in love? They don’t shout at each other but talk softly, because their hearts are very close. The distance between them is either nonexistent or very small..’ The saint continued, ‘When they love each other even more, what happens? They do not speak, only whisper and they get even closer to each other in their love.

Finally they even need not whisper, they only look at each other and that’s all. That is how close two people are when they love each other. He looked at his disciples and said. So when you argue do not let your hearts get distant, Do not say words that distance each other more, Or else there will come a day when the distance is so great that you will not find the path to return.

Monday, July 16, 2012

படித்ததில் பிடித்தது - 5

பிரச்சினையா? அசௌகரியமா?



உங்களுக்குப் பிரச்சினையா?-இதை அவசியம் படியுங்கள்
 பல வருடங்களுக்கு முன்பு ரீடர்ஸ் டைஜஸ்டில் ஒரு கட்டுரை.நண்பர் ஒருவர் அவரின் வலைபூவில் பதிந்ததை உங்களுடன் பகிர்கிறேன்.

 அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர் "நான் படித்த மிகப்பெரிய பாடம்" என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதி இருந்த கட்டுரை அது.

 அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த ஒரு கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப் பளு அதிகம் இருந்த ஒரு நாள் வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தினார். "முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது இது போல் கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை(problem) தருகிறீர்கள்." என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளினார். அவர் பேசியதில் பிரச்சினை என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப்பட்டது.

 எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னார். "நீ பேசும் போது பிரச்சினை என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை (problem) என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத் தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை. உன் வீடு எரிந்து போய் இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது பிரச்சினை.... ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே அது பிரச்சினை. இது போன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்".

"மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள்(inconveniences). இது போன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்த சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக் கணக்கிலோ நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அற்ப விஷயமாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது."

"நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக் கொள். நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இது போன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது"

அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு எல்லாவற்றையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் துவங்கியதாய் அந்த அதிகாரி அந்தக் கட்டுரையில் பின்னாளில் எழுதினார். "

நாமும் அசௌகரியமா, பிரச்சினையா என்று ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலைகளில் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டும். சரியான பெயரில் அணுகும் போதே அதை சமாளிப்பது எளிதாகிறது. அசௌகரியத்தின் சக்தி எல்லாம் அந்தந்த நேரத்திற்குத் தான். நிதானம் இழக்காமல் இருந்தால் தூசைத் தட்டுவது போல் அதைத் தட்டிக் களைய முடியும். அப்படி முடியாததை அந்த நேரத்தில் சற்றுப் பொறுமையாக தாக்குப் பிடித்தால் அந்தக் கட்டத்தை சுலபமாக கடக்க முடியும். அந்தக் கேப்டன் சொன்னது போல வாழ்க்கையில் நாம் பிரச்சினையாகக் கருதுவதில் பெரும்பாலானவை அசௌகரியங்களே.

நம்மில் எத்தனை பேர் அசௌகரியங்களை பூதக்கண்ணாடி மூலம் பார்த்து அதற்குப் பிரச்சினை என்று பெயரிட்டு தேவைக்கும் அதிகமாக கொந்தளித்து, நிஜமாகவே பிரச்சினை ஆக்கி, மற்றவர்கள் மன அமைதியையும், நம் மன அமைதியையும் இழந்து அல்லல் படுகிறோம். பல சமயங்களில் நாம் அப்படிப்பட்ட 'பிரச்சினை'யைக் கைவிடுவது எப்போதென்றால் அடுத்த 'பிரச்சினை' ஒன்று வரும் போது தான்.

நீங்களும் நிதானமாக யோசியுங்கள்- உங்கள் பிரச்சினை உண்மையில் பிரச்சினை தானா? இல்லை இப்போதைய அசௌகரியமா? இப்போதைய அசௌகரியம் என்றால் அப்படி உணரும் போதே மன உளைச்சல் தானாகக் குறையக் காண்பீர்கள். அதை சரி செய்யப் பாருங்கள். அல்லது அலட்சியப்படுத்துங்கள். அதை சிறிது காலம் தாக்குப் பிடியுங்கள். அப்படிச் செய்தால் அவை சீக்கிரமாகவே விலகுவதைக் காண்பீர்கள். அவற்றிற்கு நீங்கள் தரும் நேரமும், கவனமும், சக்தி விரயமும் குறையும் போது உண்மையான ஓரிரு பிரச்சினைகளுக்கோ, தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களுக்கோ அந்த நேரத்தையும், அந்த கவனத்தையும், அந்த சக்தியையும் நீங்கள் தர முடியும். பிரச்சினைகள் இருந்தால் தீர்க்கவும், சாதனைகள் புரியவும் இந்த சிறிய பாகுபாடும், பக்குவமும் நிறையவே உங்களுக்கு உதவி புரியும்.