Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Friday, October 5, 2012

வேலையும் வெட்டிவேலையும்



உங்களுக்கு வேலைக்கும் வெட்டிவேலைக்கும் வித்தியாசம் தெரியுமாஇரண்டும் நாம் செய்யும் ஒரு செயல் போன்றே தெரிந்தாலும் வித்தியாசமானதுஅனைவரும் இதன் வேறுபாட்டைத் தெரிந்துக் கொண்டால் வாழ்வு செழிக்கும். நீங்கள் இத்தருணத்தில் ஈடுப்பட்டிருப்பது வேலையிலா அல்லது வெட்டிவேலையிலாஇந்த ஒரு கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டால் போதும்உங்கள் வாழ்வில் யாருடைய தலையீடும் இருக்காது, நீங்களாகவே வளப்படுத்திக் கொள்வீர்கள்.

யாரெல்லாம் செழிப்பானதும்நல்வாழ்வும் வாழ விரும்புகிறீர்களோ இந்த இரண்டு வார்த்தைகளின் (வேலைவெட்டிவேலைவேறுபாடுகளை நன்கு உணர வேண்டும்பொதுவாகப் பார்ர்க்கப் போனால் இரண்டுக்கும் வேற்றுமை இல்லாதது போல் தான் உணருவீர்கள்வேலை என்று சொல்லப்படுபவை எல்லாம் உங்களை மனத்திருப்தி அடையச் செய்யும்ஆனால் வெட்டி வேலைகள் உங்களுக்கு தெரியாமல் அடிமைப் போன்று நடத்தும்இதனால் தான் இவற்றின் வேறுபாடுகளை உணர வேண்டும் என்று சொல்லப்படுகிறதுவேலை என்பது வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும், ஆனால் மற்றதோ தேவையற்ற காரியங்களில்தான் உங்களை இழுத்துச் செல்லும். முதலாவது உங்களின் உயர்ந்த கொள்கைகளை நோக்கி வழிநட்த்தவல்லது. பின்னது ஒன்றுக்கும் உதவாத கேளிக்கைகளில் மற்றும் உங்கள் பொன்னான நேரத்தை உரிஞ்சும் செயல்களில்தான் நாட்டம் வளரச் செய்யும். ஒருவரை உயர்ந்த நிலைக்கு நோக்கி வளரவும், இலச்சியங்கள் நிறைவேற்றவதற்கும் உதவுவது வேலை மட்டுமே.

இந்த இரண்டு சொற்களுக்கு இருக்கும் வேறுபாட்டை சின்ன உதாரணக் கதையுடன் விளக்குகிறேன்.

 எலி கூண்டில் அடைத்து வைக்கப்படுகிறது.. அந்த கூண்டில் ட்ரெட்மில் என்னும் இயந்திரம் மற்றும் நிறைய விளையாட்டுப் பொருள்களும் வைக்கப் பட்டுள்ளன. கூண்டின் நடுவே ஒரு சிவப்பு நிறப் பொத்தானும் உள்ளது. அதை அழுத்தினால் கூண்டின் கதவு திறக்கப்படும், அதனால் எலியும் விடுவிக்கப்படும். கூண்டில் இருக்கும் எலிக்கு விடுதலைதான் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், ட்ரெட்மில் இயந்திரத்தில் எவ்வளவு நேரம் எவ்வளவு வேகமாக ஓடினாலும், இருக்கும் கேளிக்கைப் பொருள்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும் அதற்கு எங்கிருந்து விடுதலை குடைக்கும் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அதற்கு விடுதலை வேண்டுமென்றால் நேரேச் சென்று அந்த சிவப்பு நிறப் பொத்தானை அழுத்த வேண்டும், அது தவிர வேறு வழியே இல்லை. இந்த உதாரணத்தில் சிவப்பு நிறப் பொத்தானை அழுத்துவது என்பது விடுதலைக்குரிய வேலை, ட்ரெட்மில் இயந்திரத்தில் ஓடுவதும், இருக்கும் பொருட்களில் விளையாடுவதெல்லாம் கவனத்தை திசைத் திருப்பும் மற்றும் இருக்கும் நேரத்தை விரயமாக்கும் தேவையில்லாத வெட்டிவேலைகளாகும்.

மனிதனின் வாழ்க்கையும் இந்த கூண்டில் இருக்கும் எலியைப் போன்றதுதான். குறிக்கோளை அடையச் செய்யும் ஆக்கப்பூர்வமான வேலையில் ஈடுபடுட்வதை தவிர்த்து பெரும்பாலும் கவனத்தை சிதறடிக்கும் கேளிக்கைகளிலும், காலவிரயமாக்கும் வெட்டிவேலைகளில் தான் மனிதன் மனம் ஈடுபடும், இனி சில நடைமுறை உதாரணங்களைப் பார்ப்போம்.

ஏப்ரல் மாதல் வந்தால் நீங்கள் வருடக் கணக்கை சரிப் பார்த்து அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும், வரிகளை எல்லாம் கணகிட்டு அடைக்க வேண்டும். இதெல்லாம்தான் வேலைகள். இதை விடுத்து உங்கள் வாகனத்தை கழுவுவதும், கழிவறையை சுத்தம் செய்வது எல்லாம் தேவையில்லாத வெட்டிவேலைகளாகும்.

உண்மையாகவே நீங்கள் ஒரு காரியத்தை (நாவல் எழுதுவது, புத்தகம் வெளியிடுவது, ஆதரவற்றோர் இல்லம் சென்று உதவுவது, உடற்பயிற்சி செய்வது, வாகானம் ஓட்டி பழகுவது) தொடங்கத் திட்டமிருந்தால் அதை நோக்கி ஏதாவது முதல்படி எடுத்து வைப்பதுதான் உங்கள் வேலை, இதை தவிர்த்து தேவையற்ற நபர்களுடன் சேர்ந்து வெளியே செல்வது, அரட்டை அடித்துக் கொண்டிருப்பது, இணையத்தில் தேவையற்றதில் உலா வருவதெல்லாம் வெட்டிவேலையே.

நீங்கள் ஏதாவது செய்து கொண்டிருங்கள் என்று நம்மை தனியாக யாரவது விட்டுவிட்டால் போதும், வீடியோ கேம் ஆடுவது, யாருடனாவது மொக்கைப் போடுவது, போன்ற மனதை நம்மை அடிமையுறச் செய்யும் செயல்களாகளையே நாடும், உருப்படியாகச் செய்ய எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் தள்ளிப்போட்டு விடுவோம். இதெல்லாம் ஏனென்று தெரியுமா? வெட்டிவேலைகள் அனைத்தும் அனுகுவதற்கு எளிதாக இருப்பதுதான் காரணம். வெட்டிவேலைகள் எல்லாம் நம் கனவை, இலட்சியத்தை, இலக்கை நோக்கியதல்லவே. வேலைகள் அனைத்தும் பொறுப்புகளுடையது, சிந்துத்து செயல்பட வேண்டியது, துணிச்சல் தேவைப்படும், உடல் மற்றும் மனதின் உழைப்பு நிறைய தேவையானது, நீங்களே சிந்தித்துப் பாருங்கள். ஆக்கப்பூர்வமான வேலைகள் செய்ததை என்று நினைத்தாலும் மனதில் அதைச் செய்தபோது இருந்த அதே மனத்திருப்தி இப்போதும் வரும், ஆனால் மற்றதோ வெறும் அந்த நொடியில் மட்டுமே சந்தோஷம் தரக்கூடியதாகவும், இப்பொழுது அது மனதை நெருடுவுவதாகவும் இருக்கும். அவையெல்லாம் வெறும் அர்ப்ப சந்தோஷ்ங்கள் தருபவையே. ஆயிரம் வெட்டிசெயல்கள் செய்தாலும் ஆக்கபூர்வமான ஒரே ஒரு செயலுக்கு ஈடாகாது.

இப்போது சில உதாரணங்கள் சொல்கிறேன். அதில் வேலையையும், வெட்டிவேலையையும் பிரித்துப் பார்க்க முடிகிறாதா என்று பாருங்கள்.
  1. நாளை அலுவகத்தில் ஒரு முக்கிய மீட்டிங் உள்ளது அதற்கு நிறைய குறிப்புகள் எடுக்க வேண்டியுள்ளது, ஆனால் இன்றிரவு நண்பர்களுடன் திரைப்பட்திற்கு செல்கிறீர்கள்.
  2. இன்னும் இரண்டு நாட்கள்தான் உங்கள் கம்பெனியில் ஆடிட்டிங் செய்ய உள்ளது, ஆனால் இன்றிரவே ஒருவார இன்பச் சுற்றுலாச் செல்ல பயணமாகிறீர்கள்.
  3. முக்கியமான கஸ்டமரைப் பார்க்க வருவதாக சொல்லிவிட்டு, ஏதோ பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்கிறீர்கள்.
  4. முக்கியமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் தீர்ந்து விட்டன. மருத்தவரிடம் செல்லாமல் விளையாடிக் கொண்டிருக்குறீர்கள்.
  5. நீண்ட நாட்கள் விடுப்பட்ட உடற்பயிற்சியை செய்ய இன்று தொடங்கியுள்ளீர்கள். உங்கள் தொப்பை குறைத்து விடமுடியும் என்று புது நம்பிக்கை மனதில் வருகிறது. 


இன்று செய்யும் வேலை நாளை வெட்டிவேலையாகத் தெரியும். கவனியுங்கள். ஒருவர் வீட்டில் இருக்கும் கார்பெட்டை ஆறுமாத காலத்திற்கு பிறகு சுத்தம் செய்கிறார். இது வேலைதான். ஆனால் அதை மட்டுமே தினமும் செய்து கொண்டே இருந்தால்? நீண்ட நாட்களுக்கு பிறகு விடுப்பு எடுத்து சுற்றுலா செல்கிறார். ஆனால் தன் வேலையையே ராஜினாமா செய்துவிட்டு இரண்டு ஆண்டுக்கு சுற்றுலாச் சென்று கொண்டே இருந்தால்?


நாம் மனதில் கொள்ள வேண்டியது இதுதான். எதையுமே அளவுடன் செய்து வருவதனால் எந்த தவறுமில்லை. அச்செயலிற்கு அடிமையாகும் போதே ஆபத்து வருகிறது. நம் புரிதலில்தான் எல்லாம் உள்ளது. நீங்கள் இத்தருணத்தில் ஈடுப்பட்டிருப்பது வேலையிலா அல்லது வெட்டிவேலையிலாஇந்த ஒரு கேள்விக்கு பதில் தெளிவாகத் தெரிந்தால் போதும்உங்கள் வாழ்வில் யாருடைய தலையீடும் இருக்காது, நீங்களாகவே வளப்படுத்திக் கொள்வீர்கள்.

மீண்டும் சந்திப்போம்
anand82kumar

Friday, December 16, 2011

பிரம்மாண்ட பிரமிட்களின் சில உண்மைகள் (The Secrets of Great Pyramids)

                            இங்கு நான் சேகரித்த தகவல்களை மட்டுமே பகிர்கிறேன். என் மனதிற்கு எது சாத்தியமென்று படுகிறதோ அதை மட்டுமே எழுதிகிறேன். பிழைகள் கண்டிப்பாக இருக்கும். பிழைகள் மனிதனின் இயல்புகளில் ஒன்று தானே!
                           எகிப்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாள்ர்கள் இது மிக தொன்மையான் மாயா நாகரிகம் அல்லது வேறு ஒரு நாகரிகத்திடமிருந்தோ வந்திருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் மாயா நாகரிகத்ட்தையே முதல் மனித நாகரிகமாக கருதியதற்கு காரணம் அவர்கள் Physics, Mathemetics, Chemistry, Astrology, Medicine இன்னும் பல துரைகளில் வல்லமை படைத்திருந்தாக ஆராய்ச்சியாள்ர்கள் கூருகின்றனர்.
                             இனி எகிப்த்து பிரமிட்களின் சில அதிரவைக்கும் உண்மைகள் இங்கு பார்ப்போம். நம் அண்ணன் பழங்காலத்து எகிப்த்தில் மின்சாரம் உபயோகம் இருந்தது என்றபோது நானும் அதிர்ந்தேன். சாத்தியமில்லை என்று கருதினேன், சில Article யும் கானோளியும் காணும் வரை.
                              பிரமிட்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இந்த பிரம்மாண்ட பிரமிட்கள் மனித சடலத்தை பாதுக்காக்க உருவாக்கபடவில்லை என்று அடித்து கூறுகிறார்கள். அதன் சுவரில் உள்ள சித்திரங்கள் அனைத்திலும் சடலத்தை பாதுகாப்பது பற்றி குறிப்பு எதுவும் இல்லை என்கிறார்கள். ஒரு பிரமிட் மட்டும் இதில் விதிவிளக்கு ஏனென்றால் அதில் பழங்கால எகிப்திய ராஜா ஒருவரின் சடலம் வைத்திருப்பதாகவும் அதை பொக்கிசமாக பாதுக்காபதாகம் எகிப்தியர்கள் சொல்கிறார்கள்.மற்ற பிரமிட்களின் சுவர்களில் மின்சாரம் உற்பத்தி பற்றியும் உபயோகம் பற்றியும் தான் அதிகமாக சித்திரங்கள் உள்ளன.
                               இந்த பழங்கால எகிப்தியர்கள் நம்மை ஆச்சிரபடுத்துவது அவர்கள் உபயோகித்த BAGHDAD BATTERY என்னும் பாடரிகள் தான். கையேந்தி மின்விளக்குகளும்(Wireless lights) இவர்கள் பயன்படித்தியுள்ளனர் என்பதையெல்லாம் நம்மால் நம்ப முடியாததாகவே உள்ளது. அலக்சாண்டர் காலத்திலிருந்த கோபுர கடற்கரை விளக்கு, பழங்கால எகிப்தியர்கள் மின்சாரம் உபயோகம் செய்திருக்கின்றனர் என்பதற்கு சாட்சி !
                               அந்த கால ராஜாக்களின் அரண்மனையை ஒளியூட்டி அலங்கரிக்கவும், தொழில் செய்யவும், கடல் கடக்கவும் இவர்கள் கண்டுபிடித்த மின்சாரத்தை பயன்படுதியிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சொல்வதெல்லாம் இந்த பிரம்மாண்ட பிரமிட்கள் எல்லாம் தான் அவர்களின் மின்சாரம் தயாரிக்கும் மிக பிரம்மாண்டமான Electrical Power Station. இவ்வளவு பிரம்மாண்ட பிரமிடினுள் எப்படி மின்சாரம் ?......வாருங்கள் அந்த தொழில்நுட்பதிற்கு செல்வொம்.

பிரமிடின் வெளிசுவர் சுத்தமான் ஒருவகை சுண்ணாம்பு கற்களால் கட்டபட்டது. இந்த கற்கள் மிகவும் நெருக்கிவைத்து கட்டப்பட்டவையாகும். இந்த சுண்ணாம்பு கற்களில் மெக்னீசியம் இல்லை என்பது கூடுதல் தகவல். இதனால் இந்த வெளிச்சுண்ணாம்பு சுவர் மின் தாங்கி (Insulator) போல் செயல்பட்டு பிரமிடின் உள்ளே தயாரிக்கும் மின்சாரம் வெளியே கசிவதை தடிக்கிறது.

அடுத்த உள்சுவரும் சுண்ணாம்பு கற்களால்தான் ஆனது. ஆனால் வெளிச்சுண்ணாம்பு சுவரிலிருந்து இது வேறுபடும். எப்படியென்றால் இந்த உள்ச்சுண்ணாம்பு சுவரில் CRYSTALஉம் மெட்டலும் சிறிய சதவீதம் கலந்து இருக்கும். அதனால் இது மின்கடத்தி(Conductor) போல் செயல்படுகிறது.
உள்ளே இருக்கும் சுவர்கள் கிரானைட் கற்களும் உண்டு. கிரானைட் கர்கள் மிக சிறந்த மின்கடத்தியாகும். மேலும் ரேடியோ ஆக்டிவ் சப்ஸ்டஸுமாகும். அதனால் உள்ளே இருக்கும் காற்றை அயனாக்கம்(Ionization) செய்ய உதவுகிறது. (ஏற்றம் ஒன்றை பெறுவதன் மூலம் அல்லது இழப்பதன் மூலம் அணு அல்லது மூலக்கூறு ஒன்று அயன் நிலைக்கு மாறும் பௌதீக செயல்பாடு(Chemical reaction) அயனாக்கம் (Ionization) எனப்படும்)


ஒரு வயரை நாம் பார்த்தோமேயானால் வெளியே மின்தாங்கி (Insulator) மற்றும் உள்ளே மின் கடத்தியும்(Conductor) இருக்கும். அதே போல்தான் பிரமிட்களும் வடிவமைக்கப்பட்டுருக்கின்றன.
இப்போது வயர் ரெடியாகிவிட்டது. அதற்கு தொடர்ந்து மூலப்பொருள் வேண்டுமே! தடையில்லா மின்சாரம் கடத்தி சென்று பயனாளிகளுக்கு குடுக்க...வாங்க இன்னும் கொஞ்சம் கீழப்போகலாம்.
அந்தகாலத்துல செளிப்பாக இருந்த நதி தான் இந்த பிரமிடின் மின்சாரத்திற்கு ஆகாரமே!!! (நதியின் பெயர் எம் சிற்றரிவுக்கு புலப்படவில்லை) உடனே இது Hydro Electical Plant ஆ என்று நமக்கு எண்ணத் தோன்றும். அது இல்லை இது.

நீங்கள் நம்பமாடீங்க இந்த பிரமிட் எல்லாம் ஒரு நதியின் நீரை திருப்பிவிடப்பட்டு (Underground back water) பூமிக்கு அடியில் சேகரிக்கப்பட்டு அதன் மேல் தான் கட்டப்பட்டன. நிலத்தடியிலும் சுவர்கள் கட்டி நதி நீர் வந்து செல்வதற்கு ஏதுவாக சுவர்கள் இருந்தன. இந்த அமைப்பை AQUIFER என்ற் அழைக்கின்றனர். இந்த வேகமான நிலத்தடி நீரோட்டம் தான் தொடர் மின்சாரதிற்கு ஆதாரம்.

இந்த உற்பத்தி கூடம் (Under ground Chamber) பிரமிடின் அடியில் தான் உள்ளது. அதன் வழி எல்லாம் ஒருவகை சுண்ணாம்பு கற்களாலும் கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. அந்த நீரோட்டம் மூலம் உற்பத்தி கூடத்தில் (Under ground Chamber) கிரானைட் கற்கள், க்ரிஸ்டல், மெட்டல் மூலமாக மின்சக்தி உற்பத்தியாகும். இந்த வகை உற்பத்திக்கு PHYSIO ELECTRICITY என்று பெயர்.

இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரம் கிரானைட் கற்கள் மூலம் நேரே பிரமிடின் உச்சியுள்ள தங்கத்தாலான குப்பி/மூடி க்கு கடத்தி செல்லபடுகிறது. இந்த த்ங்க குப்பி(Gold Stone Cap) Negative அயன்னை அயனோஸ்பியர்க்கு கடத்த உதவுகிறது.
இப்படி தாங்க சாமி அவீங்க கரண்ட் கண்டுபிடிச்சு உபயோகிச்சாங்க............

பிரமிடின் மேலிருந்த தங்க மூடி இப்போது “மம்மி” படத்தில் தவிர வேறு எங்கும் இல்லை.....பிற்காலத்தில் நடந்த போரில் அதை கவர்ந்து சென்றதாக கூற்படுகிறது.