Tuesday, November 27, 2012

படித்ததில் பிடித்தது - 9

நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.


சீசரியன், இந்த ஆப்பரேசன முதன்முதலில் செய்தவரே சீசர் தான் ....
அதனால் தான் அந்த பெயர் வந்தது ..... அதுமட்டும் அல்ல உலக அழகி
கிளியோபாட்ரா க்கு தான் சீசர் இந்த ஆப்பரேஷனை செய்தார்


பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.


நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.


கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.


மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.


ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.


மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.


பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.


உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.


ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை


பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.


பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.


பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.


நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.


நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.


யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.


ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.


தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.


முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.


தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

Monday, November 5, 2012

நினைவாற்றல் வழுப்பெற பத்து கோட்பாடுகள் - பாகம் 3


மிகைபடுத்துதல்

இங்கு நம் மூளையின் விஷேச குணத்தை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதாவது நம் மூளை என்றுமே பெரிய அளவிலான சித்திரங்களையும், பொருட்களையும், அல்லது பெரிய அளவிளான எதையும் விரைவில் நினைவுக்கிடங்கில் பதிய வைத்துக் கொள்ளும், அதே போன்று அங்கிருந்து மீட்டும் எடுக்கும் திறண் வாய்ந்தது. இந்த விஷேச குணத்தை நாம் ஏன் நினைவாற்றலை அதிகப்படுத்த பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?

தினசரி வாழ்வில் ஒன்றை கவனித்தீர்களானால் இது மிக நன்றாக புரியும். நாம் வாசிக்கும் பத்திரிக்கைகளில் எவ்வளவு செய்திகள் படித்தாலும் கேளிச்சித்திரங்கள் மட்டும் நீண்ட நாட்கள் நம் நினைவில் இருப்பதை கவனித்துள்ளீர்களா? அப்படிப்பட்ட கேளிச்சித்திரங்கள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

1.   கால்பந்தாட்ட மைதானம் கட்டுமானத்தில் ஒருவர் ஊழல் புரிந்துள்ளார் என்றால் அதை சித்தரிக்கும் வகையில் ஒரு மனித உடம்பில் பெரிய கால்பந்தை தலை போல் வரைந்திருப்பார்கள் அல்லது அந்த நபரின் பொம்மையை வரைந்து வயிறு மட்டும் பெரிய கால்பந்து போல் அந்த கட்டுமான பணத்தை அவர் ஏப்பம்விட்டது போல் சித்தரித்திருப்பார்கள்.

2.   ஏதாவது முக்கியஸ்த்தர் ஒருவர் அயல்நாட்டிற்கு சிறப்புக்காரணமாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்றால் விமானத்தை உடம்பாகவும் அந்த குறிப்பிட்ட நபரின் உருவத்தை விமானத்தின் முன்பகுதியாக சித்தரித்து பறந்து செல்வதுபோல் வரைந்து இருப்பார்கள்.

இது போன்ற இன்னும் பலவகையான சித்திரங்கள் நம் மனதில் நன்கு பதிந்துவிடும். அது ஏன்னென்றால் இங்கு மேற்சொல்லப்பட்ட மூளையில் விஷேச குணத்தினால்தான் என்பது உங்களுக்கு புரியும்.

இதே போல் வார்த்தைகளிலும் நாம் பயன்படுத்தி ஞியாபகத்தில் வைத்துக் கொள்வதும் உண்டு. ஏற்கனவே வழக்கத்தில் இருக்கும் சில உதாரணங்களை இப்போது பார்ப்போம். பானைவயிறு, பீமன்பலம், கும்பகரணன் உறக்கம், , அண்டப்புழுகன், யானைக்காது, ஆந்தைகண்.

ஓமக்குச்சி (மிகவும் மெலிதான உடற்வாகு கொண்டவர்களை குறிக்க பயன்படுத்தும் சொல்), பாம்புக்காது, கழுகுகண். இது போன்ற சில விதிவிலக்கான எதிர்மறை வார்த்தைகளும் உண்டென்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதைப்போன்ற இன்னும் நிறைய வார்த்தைகளை நாம் விழிப்புணர்வு இல்லாமலேயே பயன்படுத்துகிறோம். இனி இவைகளை விழிப்புணர்வுடன் புரிந்துக் கொண்டு செய்வோம்.

நிழற்படம்

நீங்கள் கூடுமானவரை எதைப் கண்டாலும், படித்தாலும், கேட்டாலும், அவைகளை நிழற்படங்கள் போன்று ஆக்கி பின்பு நினைவில் வைத்துக் கொள்வீர்களேயானால் அது என்றென்றும் நினைவில் நிற்கும் என்பது திண்ணம். ஏன்னென்றால் இது போன்ற படங்களாக நினைவில் பதியப்படும் போது அது நினைவாற்றலின் வேகத்தை துரிதப்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நினைவில் வைத்துக் கொள்ள விரும்பும் தேதிகளாகட்டும், சூத்திரங்களாகட்டும், தொலைப்பேசி எண்களாகட்டும் அது புகைப்படங்கள் போன்று தங்களால் வடிவமைக்க முடியுமானால் முயன்று நிழற்படங்களாய் மனதில் காணுங்கள். அது மிக எளிமையாக பதிந்துவிடும்.

ஒரு பாடத்தையோ, கட்டுரையையோ படிக்கும் போதே மனதளவில் அந்த வார்த்தைகளுக்கும், கதாப்பாத்திரங்களுக்கும் தங்களுக்கு பிடித்த உருவங்கள் குடுத்துப் பாருங்கள், பின்பு அதை திரைப்படங்களாய் மனதில் ஓட்டிப்பாருங்கள். மனதில் நன்கு பதியும்படி ஒவ்வொன்றையும் தெளிவாக காண முயலுங்கள். இவ்வாறு பயிற்சி செய்வதன் மூலம் நினைவாற்றல் மிக வேகமாக வளர்வதை நீங்களே அனுபவ பூர்வமாக உணர்வீர்கள்.

பாலினம்

பாலினம் என்பது எப்போதுமே ஈர்க்கபடுவதாகத்தான் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை இருந்து வருகிறது. இதையும் நினைவாற்றலை நிலைப்பெற உதவும்படியாக மாற்றலாம் என்று இந்த துறை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இப்போது சொல்வதை நீங்கள் தவறாக நினைத்து விடக்கூடாது. சொல்லப்போகும் விசயம் நினைவாற்றலை உத்வேகப்படுத்த மட்டுமே சொல்லப்படும். அதை தவறான முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வதோ, மற்றப் பாலினத்தவரை கேலிச் செய்யவோ நாம் பயன்படுத்திவிடக் கூடாது என்பதே எனது வேண்டுகோள். இனி விசயத்திற்கு வருவோம், சிலரின் ஒரு சில நடவடிக்கைகள் எதிர்பாலினத்தவர்களை ஒத்திருப்பது நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பதொன்றாகும். ஒருசிலரின் தோற்றத்திற்கும் குறளுக்கும் முற்றிலுமாக வேறுபட்டிருக்கும், தோற்றத்திற்கும் நடவடிக்கைக்கும் சம்பந்தமேயிருக்காது. இது போல பலவற்றை நாம் காண்கிறோம். இவைகளில் சிலவற்றை நாம் நம் நினைவாற்றலை அதிகப்படுத்துவற்கு உபயோகப்படுத்தலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

1.   ஒருவர் சொல்லும் செய்தியை நாம் நினைவில் வைக்கவேண்டுமெனில் அவர் சொல்வதை அப்படியே எதிர்பாலினத்தவர் சொன்னால் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள், அதிலும் வேடிக்கையான எதிர்பாலினத்தவரின் குரலில் இந்த நபர் பேசுவதைப் போல் மனதில் நினைத்துப் பாருங்கள்.

2.   கணக்குப்பாடம் படிக்கும்போது சூத்திரங்களை ஏதாவது பிடித்த மனிதர்கள் அல்லது மிருகங்களின் குரலில்க்கூட நீங்கள் அதை படித்துப்பார்கலாம்.

இவ்வாறு எதிர்பாலினத்தினைக்கூட நம்மால் நினைவாற்றல் பெறுக்கும் வகையில் மாற்றி உபயோகப்படுத்த முடியும்.

தனித்தன்மை

வகுப்பறையில் உங்கள் ஆசிரியர் ஒருவர் இன்று தலைகவசத்துடன் வந்து பாடத்தை நடத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் நடத்தின பாடத்தை உங்களால் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாது என்று நான் உறுதிபட கூறமுடியும். அது போல் நீங்கள் உங்கள் திருக்கரங்களால் தாய்கோ அல்லது மற்ற உறவினர்களுக்கோ சமையல் செய்த தினத்தை என்றும் மறந்திருக்கமாட்டீர்கள். அல்லது சட்டையை இஸ்திரி செய்யும் போது அதில் பெரிய ஓட்டை விழுந்ததுண்டா. நம் வீட்டு குழந்தைகள் மழலை கொஞ்சும் மொழியில் ஒரு மேஜையை காண்பித்து மேஜையின் பெயர் என்ன? என்று கேட்கும். இது போன்ற நிகழ்வுகளை வாழ்வில் என்றும் பசுமையாக மனம் அதன் அடிஆழத்தில் வைத்து இருக்கும். இது ஏன்? நமது மூளை என்றுமே இதுபோன்ற வழக்கத்திற்கு மாறான தனித்தன்மையான நிகழ்வுகளை நினைவுகளின் ரகசிய அறையில் வைத்துக் கொள்கிறது. ஆதலால் இது போன்ற நிகழ்வுகள் என்றும் நினைவில் இருந்து அகன்றுவிடுவது இல்லை.

என்றும் வழக்கத்தில் இருந்து மாறுபட்டு செய்யும் செயலையும், காட்சிகளையும், கேட்பவனவற்றையும் நம் மனம் அதன் ஆழத்தில் பதிந்து வைத்து பின் எப்போது வேண்டுமானாலும் மீட்டெடுத்துக்குடுக்கும் வல்லமையுடையது. மேலும் நாம் செய்யும் செயலில் ஆர்வத்தையும் தூண்டும். ஆர்வத்துடன் செய்யும் எதையும் மூளை என்றுமே நினைவுப்பெட்டகத்தில் இருந்து அழிக்காது என்பது உறுதி.

நினைவுகள்

எல்லாவற்றையும் சேர்த்து ஞியாபகத்தில் வைத்துக் கொள்வது சிரமம் என்று சொல்பவர்கள், சில சிறிய சிறிய உபரி தகவல்களையும் ஞியாபகத்தில் வைக்க கஷ்டப்படுவார்கள். இம்மாதிரியான நிலைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. அதற்கு முன் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். பெரிய தியரியானாலும் சரி, சிறிய சமன்பாடானாலும் சரி, எளிய சூத்திரமானாலும் சரி, எந்த ஒரு தகவலாக இருந்தாலும் அதை உருவமாக / உருவகமாக பார்க்கும் வகையில் நாம் செய்திட வேண்டும். அதன் பிறகு இந்த மனசித்திரங்கள் நமக்கு நினைவில் வைத்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும். வேண்டுமென்ற போது நினைவுபடுத்துவதற்கும் உதவியாக இருக்கும். எந்த தகவலுமே நாம் புரிந்து கொள்ளும்படி எளிமையானதாக பகுக்கப்பட வேண்டும், சிறிய மனசித்திரங்கள் போன்று காண இயலவேண்டும். இவ்வாறு இல்லாமல் எந்த தகவலையும் நாம் நம் மண்டையினுள் அனுப்ப முடியாது. மூளையும் இவ்வாறல்லாதவற்றை ஏற்றுக்கொள்ளாது. 

தகவலை புரிந்துக் கொள்ளாது நினைவைல் வைத்துக் கொள்ள முயற்சிப்பதென்பது நமது வங்கி கணக்கில் அயல் நாட்டு பணத்தை செலுத்துவது போன்று இயலாத காரியம். அவ்வாறு நாம் அயல் நாட்டு பணத்தை செலுத்த வேண்டுமானால் முதலில் அயல்  நாட்டு பணத்தை நம் நாட்டு பணமாக மாற்ற வேண்டும், பிறகு தான் நம் வங்கி கணக்கில் அயல் நாட்டிற்கினையான நம் நாட்டுப் பணத்தை செலுத்த முடியும்.

இதே போன்று தான், நம்மிடம் இருக்கும் தகவல்களை நமக்கு புரியும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும் அல்லது சிறிய தகவல்களாக அதை மாற்ற வேண்டும். மனத்திரையில் இந்த எளிமையானவற்றை படங்களாக பார்க்க முயல வேண்டும். பிறகுதான் நம் மூளை அந்த முளு தகவலையும் அப்படியே பதிந்து வைத்து பின் தேவையான போது நினைவுப்படுத்தும்.


ஒவ்வொரு தகவலையும் நமக்கு தெரிந்தவற்றுடன் தொடர்புபடுத்தி, உங்கள் நினைவாற்றிலின் மேல் முழு நம்பிக்கை வைத்து மனஒருமைப்பாட்டுடன், உணர்வுகள் அனைத்தையும் பயன்படுத்தி காணும் நிறங்களையும் மிகைபடுத்தி மனதில் நிழற்படங்கள் எடுத்து பாலினத்தின் தனித்தன்மையோடு நினைவுகளை தொடந்தால் எல்லாத் தருணங்களும் நம் மனதில் நீங்கா பசுமையாக நிலைத்து இருக்கும் என்று தெரிவித்து இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

இது நாள்வரை இங்கு நான் பகிர்ந்த இந்த நினைவாற்றல் வழுப்பெற கூறிய கோட்பாடுகள் தங்களுக்கும் உங்களுக்கு தினசரி வாழ்வில் உதவுமென்று நம்புகிறேன். ஆதரவு தந்த அத்தனை உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

---நன்றி---

anand82kumar

Wednesday, October 31, 2012

படித்ததில் பிடித்தது - 8

நம் கால்நடைகளை காப்போம்




ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.

அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான, ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையை பற்றி நீண்ட
விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை, பிரிட்டிஷாரை சார்ந்திருக்கவும், அவர்களுக்கு சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்திய கால்நடைகள், குற
ிப்பாக, பசுக்கள் தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும். இப்பசுக்களை அழித்துவிட்டால், விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காகவும் ஆங்கிலேயர்களை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக் கொல்லியாகவும் காலம், காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது.பசுக்கள் அழிந்தால், இந்தியர்கள், உரத்திற்கும், பூச்சிக் கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரை சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு, 54 குவிண்டால் அளவுக்கு சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760ல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்ல, பசுவதை கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். முதல் பசுவதைக் கூடம் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு, 30 ஆயிரம் பசுக்கள் வீதம், ஒரு ஆண்டில் ஒரு கோடி பசுக்களை கொன்றார். அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன், இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவு என்ற போர்வையில் கொல்லப்பட்டன.அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள் தொகையை விட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன்மூலம் ஆரோக்கியமான உணவு உற்பத்தி நடந்தது. 1910ம் ஆண்டு நம்நாட்டில், 350 பசுவதைக் கூடம் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததும், நாம் ரசாயன உரத்திற்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.


நம்நாடு சுதந்திரம் அடைந்த பின், பசுமை புரட்சி என்ற பெயரில், பெருமளவு ரசாயன உரங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்கினோம். அதன் பக்க விளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.ஒருமுறை காந்தியிடம், ஒரு பத்திரிகை நிருபர் கேட்ட கேள்விக்கு, அவர் கூறிய பதில், "இந்தியா சுதந்திரம் அடையும் அந்த நாளில், இந்தியாவில் உள்ள அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்' என்றார். 1929ம் ஆண்டு, நேரு ஒரு பொதுக் கூட்டத்தில், "நான் இந்தியாவின் பிரதமரானால், இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்' என்றார்.இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால், 1947க்குப் பின், 350 பசுவதைக் கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் என்ற நிலைக்கு, "முன்னேறி' விட்டோம். இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக் கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றன. டில்லியில் மட்டும், 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குகின்றன. இங்கு மட்டும் நாளொன்றுக்கு, இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.நமது நாட்டு பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள், நல்ல உடல் சக்தியுடன், நோய் எதிர்ப்பு திறன், வெயிலை தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக் கணக்கான பசுக்களை சந்தைகளில் வாங்கி, வதைக் கூடங்களுக்கு அனுப்பி வருகிறது. இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாக செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடம் இருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.

விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தக கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன. கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்து கொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்ற திட்டத்தில், இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.விளைநிலம் குறைந்தால் என்ன, குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலாளர்கள் உள்ளனர். உணவுப் பொருட்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என, அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது, வருங்கால சந்ததிகள் தான்.

அறிவியலாளர்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளி விவரப்படி, நம் நாட்டில் உள்ள, 73 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவிற்கு உடல் உழைப்பை நமக்கு கொடையாக அளிக்கின்றன. இந்த உழைப்பின் மூலம், இதேஅளவு சக்தியை உற்பத்தி செய்ய ஆகும் நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருட்களை சேமிக்கின்றன.இக்கால்நடைகளால் ஒரு ஆண்டுக்கு, 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்கு கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய். இச்சாணம் கிடைப்பதால், 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால், மரங்கள் அதிக அளவிற்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கை சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த, 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால், நமக்கு, 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். அவற்றை இயக்குவதற்கு, 2 கோடியே, 37 லட்சத்து, 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவிவெப்பமயமாதல் அதிகரிக்கும்.இயற்கை நமக்கு தந்த செல்வங்களான, கால்நடைகளை கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை, சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்று, ரசாயன உரம் இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம்.

அதுமட்டுமின்றி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் இறக்குமதி செய்கிறோம்.ஒரு நவீன மாடு வதை கூடத்திற்கு, அதை சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு, இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தண்ணீர் தட்டுப்பாடும், எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம்நாட்டில் இயற்கையின் கொடையாக கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா

Friday, October 5, 2012

வேலையும் வெட்டிவேலையும்



உங்களுக்கு வேலைக்கும் வெட்டிவேலைக்கும் வித்தியாசம் தெரியுமாஇரண்டும் நாம் செய்யும் ஒரு செயல் போன்றே தெரிந்தாலும் வித்தியாசமானதுஅனைவரும் இதன் வேறுபாட்டைத் தெரிந்துக் கொண்டால் வாழ்வு செழிக்கும். நீங்கள் இத்தருணத்தில் ஈடுப்பட்டிருப்பது வேலையிலா அல்லது வெட்டிவேலையிலாஇந்த ஒரு கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டால் போதும்உங்கள் வாழ்வில் யாருடைய தலையீடும் இருக்காது, நீங்களாகவே வளப்படுத்திக் கொள்வீர்கள்.

யாரெல்லாம் செழிப்பானதும்நல்வாழ்வும் வாழ விரும்புகிறீர்களோ இந்த இரண்டு வார்த்தைகளின் (வேலைவெட்டிவேலைவேறுபாடுகளை நன்கு உணர வேண்டும்பொதுவாகப் பார்ர்க்கப் போனால் இரண்டுக்கும் வேற்றுமை இல்லாதது போல் தான் உணருவீர்கள்வேலை என்று சொல்லப்படுபவை எல்லாம் உங்களை மனத்திருப்தி அடையச் செய்யும்ஆனால் வெட்டி வேலைகள் உங்களுக்கு தெரியாமல் அடிமைப் போன்று நடத்தும்இதனால் தான் இவற்றின் வேறுபாடுகளை உணர வேண்டும் என்று சொல்லப்படுகிறதுவேலை என்பது வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும், ஆனால் மற்றதோ தேவையற்ற காரியங்களில்தான் உங்களை இழுத்துச் செல்லும். முதலாவது உங்களின் உயர்ந்த கொள்கைகளை நோக்கி வழிநட்த்தவல்லது. பின்னது ஒன்றுக்கும் உதவாத கேளிக்கைகளில் மற்றும் உங்கள் பொன்னான நேரத்தை உரிஞ்சும் செயல்களில்தான் நாட்டம் வளரச் செய்யும். ஒருவரை உயர்ந்த நிலைக்கு நோக்கி வளரவும், இலச்சியங்கள் நிறைவேற்றவதற்கும் உதவுவது வேலை மட்டுமே.

இந்த இரண்டு சொற்களுக்கு இருக்கும் வேறுபாட்டை சின்ன உதாரணக் கதையுடன் விளக்குகிறேன்.

 எலி கூண்டில் அடைத்து வைக்கப்படுகிறது.. அந்த கூண்டில் ட்ரெட்மில் என்னும் இயந்திரம் மற்றும் நிறைய விளையாட்டுப் பொருள்களும் வைக்கப் பட்டுள்ளன. கூண்டின் நடுவே ஒரு சிவப்பு நிறப் பொத்தானும் உள்ளது. அதை அழுத்தினால் கூண்டின் கதவு திறக்கப்படும், அதனால் எலியும் விடுவிக்கப்படும். கூண்டில் இருக்கும் எலிக்கு விடுதலைதான் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், ட்ரெட்மில் இயந்திரத்தில் எவ்வளவு நேரம் எவ்வளவு வேகமாக ஓடினாலும், இருக்கும் கேளிக்கைப் பொருள்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும் அதற்கு எங்கிருந்து விடுதலை குடைக்கும் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அதற்கு விடுதலை வேண்டுமென்றால் நேரேச் சென்று அந்த சிவப்பு நிறப் பொத்தானை அழுத்த வேண்டும், அது தவிர வேறு வழியே இல்லை. இந்த உதாரணத்தில் சிவப்பு நிறப் பொத்தானை அழுத்துவது என்பது விடுதலைக்குரிய வேலை, ட்ரெட்மில் இயந்திரத்தில் ஓடுவதும், இருக்கும் பொருட்களில் விளையாடுவதெல்லாம் கவனத்தை திசைத் திருப்பும் மற்றும் இருக்கும் நேரத்தை விரயமாக்கும் தேவையில்லாத வெட்டிவேலைகளாகும்.

மனிதனின் வாழ்க்கையும் இந்த கூண்டில் இருக்கும் எலியைப் போன்றதுதான். குறிக்கோளை அடையச் செய்யும் ஆக்கப்பூர்வமான வேலையில் ஈடுபடுட்வதை தவிர்த்து பெரும்பாலும் கவனத்தை சிதறடிக்கும் கேளிக்கைகளிலும், காலவிரயமாக்கும் வெட்டிவேலைகளில் தான் மனிதன் மனம் ஈடுபடும், இனி சில நடைமுறை உதாரணங்களைப் பார்ப்போம்.

ஏப்ரல் மாதல் வந்தால் நீங்கள் வருடக் கணக்கை சரிப் பார்த்து அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும், வரிகளை எல்லாம் கணகிட்டு அடைக்க வேண்டும். இதெல்லாம்தான் வேலைகள். இதை விடுத்து உங்கள் வாகனத்தை கழுவுவதும், கழிவறையை சுத்தம் செய்வது எல்லாம் தேவையில்லாத வெட்டிவேலைகளாகும்.

உண்மையாகவே நீங்கள் ஒரு காரியத்தை (நாவல் எழுதுவது, புத்தகம் வெளியிடுவது, ஆதரவற்றோர் இல்லம் சென்று உதவுவது, உடற்பயிற்சி செய்வது, வாகானம் ஓட்டி பழகுவது) தொடங்கத் திட்டமிருந்தால் அதை நோக்கி ஏதாவது முதல்படி எடுத்து வைப்பதுதான் உங்கள் வேலை, இதை தவிர்த்து தேவையற்ற நபர்களுடன் சேர்ந்து வெளியே செல்வது, அரட்டை அடித்துக் கொண்டிருப்பது, இணையத்தில் தேவையற்றதில் உலா வருவதெல்லாம் வெட்டிவேலையே.

நீங்கள் ஏதாவது செய்து கொண்டிருங்கள் என்று நம்மை தனியாக யாரவது விட்டுவிட்டால் போதும், வீடியோ கேம் ஆடுவது, யாருடனாவது மொக்கைப் போடுவது, போன்ற மனதை நம்மை அடிமையுறச் செய்யும் செயல்களாகளையே நாடும், உருப்படியாகச் செய்ய எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் தள்ளிப்போட்டு விடுவோம். இதெல்லாம் ஏனென்று தெரியுமா? வெட்டிவேலைகள் அனைத்தும் அனுகுவதற்கு எளிதாக இருப்பதுதான் காரணம். வெட்டிவேலைகள் எல்லாம் நம் கனவை, இலட்சியத்தை, இலக்கை நோக்கியதல்லவே. வேலைகள் அனைத்தும் பொறுப்புகளுடையது, சிந்துத்து செயல்பட வேண்டியது, துணிச்சல் தேவைப்படும், உடல் மற்றும் மனதின் உழைப்பு நிறைய தேவையானது, நீங்களே சிந்தித்துப் பாருங்கள். ஆக்கப்பூர்வமான வேலைகள் செய்ததை என்று நினைத்தாலும் மனதில் அதைச் செய்தபோது இருந்த அதே மனத்திருப்தி இப்போதும் வரும், ஆனால் மற்றதோ வெறும் அந்த நொடியில் மட்டுமே சந்தோஷம் தரக்கூடியதாகவும், இப்பொழுது அது மனதை நெருடுவுவதாகவும் இருக்கும். அவையெல்லாம் வெறும் அர்ப்ப சந்தோஷ்ங்கள் தருபவையே. ஆயிரம் வெட்டிசெயல்கள் செய்தாலும் ஆக்கபூர்வமான ஒரே ஒரு செயலுக்கு ஈடாகாது.

இப்போது சில உதாரணங்கள் சொல்கிறேன். அதில் வேலையையும், வெட்டிவேலையையும் பிரித்துப் பார்க்க முடிகிறாதா என்று பாருங்கள்.
  1. நாளை அலுவகத்தில் ஒரு முக்கிய மீட்டிங் உள்ளது அதற்கு நிறைய குறிப்புகள் எடுக்க வேண்டியுள்ளது, ஆனால் இன்றிரவு நண்பர்களுடன் திரைப்பட்திற்கு செல்கிறீர்கள்.
  2. இன்னும் இரண்டு நாட்கள்தான் உங்கள் கம்பெனியில் ஆடிட்டிங் செய்ய உள்ளது, ஆனால் இன்றிரவே ஒருவார இன்பச் சுற்றுலாச் செல்ல பயணமாகிறீர்கள்.
  3. முக்கியமான கஸ்டமரைப் பார்க்க வருவதாக சொல்லிவிட்டு, ஏதோ பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்கிறீர்கள்.
  4. முக்கியமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் தீர்ந்து விட்டன. மருத்தவரிடம் செல்லாமல் விளையாடிக் கொண்டிருக்குறீர்கள்.
  5. நீண்ட நாட்கள் விடுப்பட்ட உடற்பயிற்சியை செய்ய இன்று தொடங்கியுள்ளீர்கள். உங்கள் தொப்பை குறைத்து விடமுடியும் என்று புது நம்பிக்கை மனதில் வருகிறது. 


இன்று செய்யும் வேலை நாளை வெட்டிவேலையாகத் தெரியும். கவனியுங்கள். ஒருவர் வீட்டில் இருக்கும் கார்பெட்டை ஆறுமாத காலத்திற்கு பிறகு சுத்தம் செய்கிறார். இது வேலைதான். ஆனால் அதை மட்டுமே தினமும் செய்து கொண்டே இருந்தால்? நீண்ட நாட்களுக்கு பிறகு விடுப்பு எடுத்து சுற்றுலா செல்கிறார். ஆனால் தன் வேலையையே ராஜினாமா செய்துவிட்டு இரண்டு ஆண்டுக்கு சுற்றுலாச் சென்று கொண்டே இருந்தால்?


நாம் மனதில் கொள்ள வேண்டியது இதுதான். எதையுமே அளவுடன் செய்து வருவதனால் எந்த தவறுமில்லை. அச்செயலிற்கு அடிமையாகும் போதே ஆபத்து வருகிறது. நம் புரிதலில்தான் எல்லாம் உள்ளது. நீங்கள் இத்தருணத்தில் ஈடுப்பட்டிருப்பது வேலையிலா அல்லது வெட்டிவேலையிலாஇந்த ஒரு கேள்விக்கு பதில் தெளிவாகத் தெரிந்தால் போதும்உங்கள் வாழ்வில் யாருடைய தலையீடும் இருக்காது, நீங்களாகவே வளப்படுத்திக் கொள்வீர்கள்.

மீண்டும் சந்திப்போம்
anand82kumar

Monday, October 1, 2012

நினைவாற்றல் வழுப்பெற பத்து கோட்பாடுகள் - பாகம் 2


மனஒருமைப்பாடு

ஏதேனும் ஒரு பொருளின் மீது மனதை நிலைப் பெற செய்வதே மனஒருமைப்பாடு எனப்படுகிறது. ஒரு  பொருளைப் பார்ப்பது மற்றும் அப்பொருளை பற்றி கேட்பது மட்டுமே மனதில் இருத்தல் வேண்டும், ஏனையவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதனால் மனம் அலைப்பாய்வதை தவிர்க்கப்படும். இவ்வாறு செய்வதின் மூலம் வெறுமனே அதனை பார்ப்பது என்பதனை தாண்டி அதுப்பற்றி எல்லா தகவல்கள் உங்கள் நினைவுக் கிடங்கை சென்றடையும், இப்படித்தான் மனஒருமைப்பாடு நடைப்பெறும்

மனஒருமைப்பாட்டை கழுதைக்கு ஒப்பிடலாம். நாம் எவ்வளவு அதை தள்ளுகிறோமோ அல்லது இழுக்கிறோமோ, அதற்கு ஏற்றாற்ப் போல் அதனிடம் எதிர்ப்பு வரும். இங்கேயும் அதே தான் நடைப்பெறுகிறது. நாம் எவ்வளவு தூரம் கவனத்தை ஒருப் பொருளின் மீது குவிக்க முயல்கிறோமோ அப்போது தான் மனம் அலைப்பாயத் தொடங்கும். கழுதையை கட்டுப்பாட்டில் கொண்டுவர அதன் முன்னே காய்கறிகளை போட்டுக் கொண்டே செல்ல வேண்டும், அப்போது தான் அது நாம் எங்கே அழைக்கிறோமோ அந்த இடத்திற்கு வரும். அதே போல், ஒரு பொருளின் மீது கவனத்தைக் குவிக்க விரும்பினால் முதலில் அதன் மேல் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பின் எல்லாம் சுலபமாகி விடும். நீங்களும் முயன்று பாருங்கள்.

உணர்வுகளை பயன்படுத்துங்கள்

எதையும் உங்கள் நினைவுக் கிடங்குக்கு எடுத்துச் செல்லுமுன் நீங்கள் அதைப் பற்றி கவனமாக கேட்க வேண்டும், அதை கவனமாக பார்க்கவும் வேண்டும். எதை நீங்கள் நினைவில் வைக்க விருப்புகிறீர்களோ அதனை முதலில் சற்று பாருங்கள், பின்பு அதையே உங்கள் கர்பனையிலும் பாருங்கள், கேட்டவற்றையும் கற்பனையிலே கேளுங்கள், நுகருங்கள், சுவையுங்கள், முற்றிலுமாக உணருங்கள். அதனால் உங்கள் உணர்வுகளை கூர்மைப் படுத்தி வையுங்கள். எப்போது உணர்வுகளையும் பயன்படுத்தி நினைவில் வைக்கிறோமோ, அது பின் எந்த நாளும் எளிதாக மறந்துவிடாது என்பது தின்னம். அதனால் இனி எதையும் கற்க வேண்டுமானாலும் பின்வரும் உணர்வுகளை பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்.
1.   பார்த்து உணர்தல்.
2.   கேட்டு உணர்தல்.
3.   நுகர்ந்து உணர்தல்.
4.   சுவைத்து உணர்தல்.
5.   ஸ்பரித்து உணர்தல்.
6.   அசைவின் மூலம் உணர்தல். (அசைவுகளை, நிலைகளை)

நிறங்கள்

மனிதனுக்கான சிறப்பாக கருதப் படுவது கனவுக் காணுதல். நம்மில சிலர் பகல் கனவு காண்பவராகவும் உள்ளோம். பலர் அவர்கள் கண்ட கனவை பற்றி நண்பர்களிடம் விவாதமும் செய்வர், ஆராயவும் செய்வார்கள். எப்போதேனும் நீங்கள் கனவில் நிறங்கள் பற்றி நினைத்தது உண்டா?. ஏதேனும் கனவு நிறங்களுடன் கண்டதுண்டா, இல்லை வெறும் கருப்பு வெள்ளையில் தான் கனவு காண்பீர்களா?.

இனி கனவுக் கண்டால் நன்றாக நினைவுப் படுத்திப் பாருங்கள். நீங்கள் கண்டது, கருப்பு வெள்ளையா? அல்லது நிறங்களுடனா? கருப்பு வெள்ளை என்றால் அதனை விழிப்புணர்ச்சியுடன் நிறங்கள் குடுத்துப் பாருங்கள். பின் அதில் ஒவ்வொரு சிறிய தகவல்களையும் கவனியுங்கள், மங்களாக உள்ளதா என்று? அப்படி இருந்தால் உங்கள் கற்பனைக் குதிரையை தட்டிவிடுங்கள். பின் அந்த பகுதியை தெளிவாக பார்க்க முயலுங்கள். இனி எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பார்க்கும் நிழற்பட்த்தை, கனவில் காணும் படத்தையும் உங்களுக்கு பிடித்த நிறங்களால் நிறப்பி மனதிற்கு பிடித்தார்ப்போல் மாற்றி நினைவில் வைத்துப் பாருங்கள், அது நீங்கா நினைவாய் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

---
தொடரும்
(anand82kumar)