மிகைபடுத்துதல்
இங்கு நம் மூளையின்
விஷேச குணத்தை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதாவது நம் மூளை என்றுமே பெரிய அளவிலான
சித்திரங்களையும், பொருட்களையும், அல்லது பெரிய அளவிளான எதையும் விரைவில் நினைவுக்கிடங்கில்
பதிய வைத்துக் கொள்ளும், அதே போன்று அங்கிருந்து மீட்டும் எடுக்கும் திறண் வாய்ந்தது.
இந்த விஷேச குணத்தை நாம் ஏன் நினைவாற்றலை அதிகப்படுத்த பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?
தினசரி வாழ்வில்
ஒன்றை கவனித்தீர்களானால் இது மிக நன்றாக புரியும். நாம் வாசிக்கும் பத்திரிக்கைகளில்
எவ்வளவு செய்திகள் படித்தாலும் கேளிச்சித்திரங்கள் மட்டும் நீண்ட நாட்கள் நம் நினைவில்
இருப்பதை கவனித்துள்ளீர்களா? அப்படிப்பட்ட கேளிச்சித்திரங்கள் எவ்வாறு அமைந்துள்ளது
என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
1.
கால்பந்தாட்ட
மைதானம் கட்டுமானத்தில் ஒருவர் ஊழல் புரிந்துள்ளார் என்றால் அதை சித்தரிக்கும் வகையில்
ஒரு மனித உடம்பில் பெரிய கால்பந்தை தலை போல் வரைந்திருப்பார்கள் அல்லது அந்த நபரின்
பொம்மையை வரைந்து வயிறு மட்டும் பெரிய கால்பந்து போல் அந்த கட்டுமான பணத்தை அவர் ஏப்பம்விட்டது
போல் சித்தரித்திருப்பார்கள்.
2.
ஏதாவது
முக்கியஸ்த்தர் ஒருவர் அயல்நாட்டிற்கு சிறப்புக்காரணமாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
என்றால் விமானத்தை உடம்பாகவும் அந்த குறிப்பிட்ட நபரின் உருவத்தை விமானத்தின் முன்பகுதியாக
சித்தரித்து பறந்து செல்வதுபோல் வரைந்து இருப்பார்கள்.
இது போன்ற இன்னும் பலவகையான சித்திரங்கள் நம் மனதில் நன்கு
பதிந்துவிடும். அது ஏன்னென்றால் இங்கு
மேற்சொல்லப்பட்ட மூளையில் விஷேச குணத்தினால்தான் என்பது
உங்களுக்கு புரியும்.
இதே போல் வார்த்தைகளிலும் நாம்
பயன்படுத்தி ஞியாபகத்தில் வைத்துக் கொள்வதும் உண்டு. ஏற்கனவே வழக்கத்தில்
இருக்கும் சில உதாரணங்களை இப்போது
பார்ப்போம். பானைவயிறு, பீமன்பலம், கும்பகரணன் உறக்கம், , அண்டப்புழுகன், யானைக்காது, ஆந்தைகண்.
ஓமக்குச்சி (மிகவும் மெலிதான உடற்வாகு கொண்டவர்களை குறிக்க பயன்படுத்தும் சொல்), பாம்புக்காது, கழுகுகண். இது போன்ற சில விதிவிலக்கான எதிர்மறை வார்த்தைகளும் உண்டென்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதைப்போன்ற
இன்னும் நிறைய வார்த்தைகளை நாம்
விழிப்புணர்வு இல்லாமலேயே பயன்படுத்துகிறோம். இனி இவைகளை விழிப்புணர்வுடன்
புரிந்துக் கொண்டு செய்வோம்.
நிழற்படம்
நீங்கள் கூடுமானவரை
எதைப் கண்டாலும், படித்தாலும், கேட்டாலும், அவைகளை நிழற்படங்கள் போன்று ஆக்கி பின்பு
நினைவில் வைத்துக் கொள்வீர்களேயானால் அது என்றென்றும் நினைவில் நிற்கும் என்பது திண்ணம்.
ஏன்னென்றால் இது போன்ற படங்களாக நினைவில் பதியப்படும் போது அது நினைவாற்றலின் வேகத்தை
துரிதப்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நினைவில் வைத்துக்
கொள்ள விரும்பும் தேதிகளாகட்டும், சூத்திரங்களாகட்டும், தொலைப்பேசி எண்களாகட்டும் அது
புகைப்படங்கள் போன்று தங்களால் வடிவமைக்க முடியுமானால் முயன்று நிழற்படங்களாய் மனதில்
காணுங்கள். அது மிக எளிமையாக பதிந்துவிடும்.
ஒரு பாடத்தையோ,
கட்டுரையையோ படிக்கும் போதே மனதளவில் அந்த வார்த்தைகளுக்கும், கதாப்பாத்திரங்களுக்கும்
தங்களுக்கு பிடித்த உருவங்கள் குடுத்துப் பாருங்கள், பின்பு அதை திரைப்படங்களாய் மனதில்
ஓட்டிப்பாருங்கள். மனதில் நன்கு பதியும்படி ஒவ்வொன்றையும் தெளிவாக காண முயலுங்கள்.
இவ்வாறு பயிற்சி செய்வதன் மூலம் நினைவாற்றல் மிக வேகமாக வளர்வதை நீங்களே அனுபவ பூர்வமாக
உணர்வீர்கள்.
பாலினம்
பாலினம் என்பது
எப்போதுமே ஈர்க்கபடுவதாகத்தான் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை இருந்து வருகிறது.
இதையும் நினைவாற்றலை நிலைப்பெற உதவும்படியாக மாற்றலாம் என்று இந்த துறை ஆராய்ச்சியாளர்கள்
சொல்கிறார்கள். இப்போது சொல்வதை நீங்கள் தவறாக நினைத்து விடக்கூடாது. சொல்லப்போகும்
விசயம் நினைவாற்றலை உத்வேகப்படுத்த மட்டுமே சொல்லப்படும். அதை தவறான முன்னுதாரணமாக
எடுத்துக் கொள்வதோ, மற்றப் பாலினத்தவரை கேலிச் செய்யவோ நாம் பயன்படுத்திவிடக் கூடாது
என்பதே எனது வேண்டுகோள். இனி விசயத்திற்கு வருவோம், சிலரின் ஒரு சில நடவடிக்கைகள் எதிர்பாலினத்தவர்களை
ஒத்திருப்பது நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பதொன்றாகும். ஒருசிலரின் தோற்றத்திற்கும்
குறளுக்கும் முற்றிலுமாக வேறுபட்டிருக்கும், தோற்றத்திற்கும் நடவடிக்கைக்கும் சம்பந்தமேயிருக்காது.
இது போல பலவற்றை நாம் காண்கிறோம். இவைகளில் சிலவற்றை நாம் நம் நினைவாற்றலை அதிகப்படுத்துவற்கு
உபயோகப்படுத்தலாம். அது எப்படி என்று பார்ப்போம்.
1.
ஒருவர்
சொல்லும் செய்தியை நாம் நினைவில் வைக்கவேண்டுமெனில் அவர் சொல்வதை அப்படியே எதிர்பாலினத்தவர்
சொன்னால் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள், அதிலும் வேடிக்கையான எதிர்பாலினத்தவரின்
குரலில் இந்த நபர் பேசுவதைப் போல் மனதில் நினைத்துப் பாருங்கள்.
2.
கணக்குப்பாடம்
படிக்கும்போது சூத்திரங்களை ஏதாவது பிடித்த மனிதர்கள் அல்லது மிருகங்களின் குரலில்க்கூட
நீங்கள் அதை படித்துப்பார்கலாம்.
இவ்வாறு
எதிர்பாலினத்தினைக்கூட நம்மால் நினைவாற்றல்
பெறுக்கும் வகையில் மாற்றி உபயோகப்படுத்த முடியும்.
தனித்தன்மை
வகுப்பறையில் உங்கள்
ஆசிரியர் ஒருவர் இன்று தலைகவசத்துடன் வந்து பாடத்தை நடத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் நடத்தின பாடத்தை உங்களால் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாது என்று நான் உறுதிபட
கூறமுடியும். அது போல் நீங்கள் உங்கள் திருக்கரங்களால் தாய்கோ அல்லது மற்ற உறவினர்களுக்கோ
சமையல் செய்த தினத்தை என்றும் மறந்திருக்கமாட்டீர்கள். அல்லது சட்டையை இஸ்திரி செய்யும்
போது அதில் பெரிய ஓட்டை விழுந்ததுண்டா. நம் வீட்டு குழந்தைகள் மழலை கொஞ்சும் மொழியில்
ஒரு மேஜையை காண்பித்து மேஜையின் பெயர் என்ன? என்று கேட்கும். இது போன்ற நிகழ்வுகளை
வாழ்வில் என்றும் பசுமையாக மனம் அதன் அடிஆழத்தில் வைத்து இருக்கும். இது ஏன்? நமது
மூளை என்றுமே இதுபோன்ற வழக்கத்திற்கு மாறான தனித்தன்மையான நிகழ்வுகளை நினைவுகளின் ரகசிய
அறையில் வைத்துக் கொள்கிறது. ஆதலால் இது போன்ற நிகழ்வுகள் என்றும் நினைவில் இருந்து
அகன்றுவிடுவது இல்லை.
என்றும் வழக்கத்தில்
இருந்து மாறுபட்டு செய்யும் செயலையும், காட்சிகளையும், கேட்பவனவற்றையும் நம்
மனம் அதன் ஆழத்தில் பதிந்து வைத்து பின் எப்போது
வேண்டுமானாலும் மீட்டெடுத்துக்குடுக்கும் வல்லமையுடையது. மேலும் நாம் செய்யும் செயலில்
ஆர்வத்தையும் தூண்டும். ஆர்வத்துடன் செய்யும் எதையும் மூளை என்றுமே நினைவுப்பெட்டகத்தில்
இருந்து அழிக்காது என்பது உறுதி.
நினைவுகள்
எல்லாவற்றையும்
சேர்த்து ஞியாபகத்தில் வைத்துக் கொள்வது சிரமம் என்று சொல்பவர்கள், சில சிறிய சிறிய
உபரி தகவல்களையும் ஞியாபகத்தில் வைக்க கஷ்டப்படுவார்கள். இம்மாதிரியான நிலைகளுக்கும்
ஒரு தீர்வு உண்டு. அதற்கு முன் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். பெரிய தியரியானாலும்
சரி, சிறிய சமன்பாடானாலும் சரி, எளிய சூத்திரமானாலும் சரி, எந்த ஒரு தகவலாக இருந்தாலும்
அதை உருவமாக / உருவகமாக பார்க்கும் வகையில் நாம் செய்திட வேண்டும். அதன் பிறகு இந்த
மனசித்திரங்கள் நமக்கு நினைவில் வைத்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும். வேண்டுமென்ற
போது நினைவுபடுத்துவதற்கும் உதவியாக இருக்கும். எந்த தகவலுமே நாம் புரிந்து கொள்ளும்படி
எளிமையானதாக பகுக்கப்பட வேண்டும், சிறிய மனசித்திரங்கள் போன்று காண இயலவேண்டும். இவ்வாறு
இல்லாமல் எந்த தகவலையும் நாம் நம் மண்டையினுள் அனுப்ப முடியாது. மூளையும் இவ்வாறல்லாதவற்றை
ஏற்றுக்கொள்ளாது.
தகவலை புரிந்துக்
கொள்ளாது நினைவைல் வைத்துக் கொள்ள முயற்சிப்பதென்பது நமது வங்கி கணக்கில் அயல் நாட்டு
பணத்தை செலுத்துவது போன்று இயலாத காரியம். அவ்வாறு நாம் அயல் நாட்டு பணத்தை செலுத்த
வேண்டுமானால் முதலில் அயல் நாட்டு பணத்தை நம்
நாட்டு பணமாக மாற்ற வேண்டும், பிறகு தான் நம் வங்கி கணக்கில் அயல் நாட்டிற்கினையான
நம் நாட்டுப் பணத்தை செலுத்த முடியும்.
இதே
போன்று தான், நம்மிடம் இருக்கும் தகவல்களை நமக்கு புரியும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும்
அல்லது சிறிய தகவல்களாக அதை மாற்ற வேண்டும். மனத்திரையில் இந்த எளிமையானவற்றை படங்களாக
பார்க்க முயல வேண்டும். பிறகுதான் நம் மூளை அந்த முளு தகவலையும் அப்படியே பதிந்து வைத்து
பின் தேவையான போது நினைவுப்படுத்தும்.
ஒவ்வொரு தகவலையும்
நமக்கு தெரிந்தவற்றுடன் தொடர்புபடுத்தி, உங்கள் நினைவாற்றிலின் மேல் முழு நம்பிக்கை
வைத்து மனஒருமைப்பாட்டுடன், உணர்வுகள் அனைத்தையும் பயன்படுத்தி காணும் நிறங்களையும்
மிகைபடுத்தி மனதில் நிழற்படங்கள் எடுத்து பாலினத்தின் தனித்தன்மையோடு நினைவுகளை தொடந்தால்
எல்லாத் தருணங்களும் நம் மனதில் நீங்கா பசுமையாக நிலைத்து இருக்கும் என்று தெரிவித்து
இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
இது நாள்வரை இங்கு
நான் பகிர்ந்த இந்த நினைவாற்றல் வழுப்பெற கூறிய கோட்பாடுகள் தங்களுக்கும் உங்களுக்கு தினசரி வாழ்வில் உதவுமென்று நம்புகிறேன். ஆதரவு தந்த அத்தனை உள்ளங்களுக்கும் எனது
மனமார்ந்த நன்றிகள்.
---நன்றி---
anand82kumar