Saturday, February 2, 2013

அவனும் அவளும் – புதிரும் புரிந்துணர்வும்


சில நாட்களாக மீண்டும் எழுத வேண்டும் என்று ஆசை மனதில் ஏற்பட்டு இருந்தது. அலுவலக பணியின் பளுக் காரணமாக எழுத முடியாமல் போயிற்று. இன்று எப்படியும் ஆரம்பித்துவிட வேண்டும் என்று மனதில் கங்கனம் கட்டிக் கொண்டுவிட்டேன். எப்படியாவது முயன்று தினம் தினம் சிறு சிறு பகுதிகளாக எழுதி சேகரித்து வாரம் ஒரு முறை வெளியிட வேண்டுமென்று முடிவு செய்துள்ளேன், பார்ப்போம். நான் எழுதுவதைப் படிப்பவர்களுக்கு அனுதினமும் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் உபயோகமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி யோசிக்கையில் எனக்கு மிகவும் பிடித்ததையே எழுதலாம் என்று தோன்றியது. அதாவது மனிதர்களைப் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதையே எழுதலாம் என்றும் முடிவும் செய்தேன்.

மனிதர்களின் வாழ்வுதான் இருப்பதிலே மிகவும் அதிக சுவாரசியமான ஒன்றாக நான் கருதுகிறேன். அதிலும் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவுகளில் அந்த ஸ்வாரசியத்திற்கு பஞ்சமேது?. வீடு, அலுவலகம், கல்வியகம் என எங்கும் இவர்களின் உறவுகளில் தினம் தினம் புதுப்புது அர்த்தங்கள், நட்புகள், காதல்கள், ஒற்றுமை, கிண்டல் கேலிகள், புரிந்துணர்வு, வெறுப்புணர்வு என சொல்லிக்கொண்டே போகலாம். என்னதான் நாம் நம் தோழி / தோழனை மற்றும் சக வயதொத்த எதிர்பாலினத்தவரை எவ்வளவுதான் புரிந்து வைத்திருந்தாலும், எல்லாம் பலபேருக்கு அவரவர்களின் கணவன் / மனைவியென்று வந்துவிட்டால் போதும், அவர்களை மட்டும் நம்மால் புரிந்துக்கொள்ளவே முடிவதில்லை. இதில் வெகு சிலரே பாக்கியம் செய்திருப்பார்கள், ஏனையோரைப் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை!! ஏனென்றால் அவ்வாறானவர்களால்தான் இந்த பூவுலகமமே நிறைந்திருக்கிறது!!. ஆகையால் இந்த இரு வேறு கிரகவாசிகளும் ஒன்று சேரும் கல்யாண வைபோகத்திற்கு பின் (அது எவ்வகையான கல்யாணமானாலும்) தங்கள் துணையைப் பற்றி நன்கு புரிந்துக்கொள்ள, வாழ்வை இன்னும் இனிமையாக நட்த்திச் செல்ல, இந்த தொடர் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இங்கு நான் எழுத இருக்கும் அனைத்தும் மார்ஸிலுருந்து ஆண்களும், வீணஸிருந்து பெண்களும் என்ற ஆங்கில புத்தகத்திலிருந்துதான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த புத்தகத்திலிருந்து காப்பியடித்து எழுதுவது பெரிய விசயமா என்று நீங்கள் நினைக்கலாம். எனக்கும் இது தோன்றாமல் இல்லை, இருந்தாலும் இதை தமிழில் எளிமையாக எழுத முயற்சிக்கலாம் என்று ஒரு எண்ணம்தான். இதற்கு தங்களின் ஆதரவு அளித்து என்னை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



இந்த தொடரில் முழுவதும் ஆண்கlளை மார்ஸ்லிருந்து வந்தவர்களாகவும், பெண்களை வீனஸ்லிருந்து வந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இது அவர்களின் உண்மையான குணாதி\சயங்கள் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு எளிதாக இருக்கும்.

முன்பு ஒரு காலத்தில், ஆண்கள் மார்ஸ்லிருந்தாவாறு தொலைநோக்கி மூலம் வானத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது வீணஸ் கிரகத்தில் வாழும் பெண்களை அவதானித்தார்கள். அதே சமயம் பெண்களும் தொலைநோக்கி மூலம் மார்ஸ்லிருக்கும் ஆண்களை அவதானித்துக் கொண்டிருந்தனர். ஒருவரையொருவர் சைட் அடித்துக் கொண்டிருந்த கணத்திலேயே இருவரின் உள்ளேயும் ஒரு இனம்காண முடியாத ஒரு உணர்வு எழுவதை கண்டனர். இவரும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டனர். இதைதான் நாம் ஆங்கிலத்தில் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்று சொல்வதுமுண்டு.. உடனே நம் ஆண்கள் என்னதார்கள் தெரியுமா?. ஒரு பரக்கும் தட்டுப் போல் ஒரு விண்கலத்தை கண்டுபிடித்து, வீணஸ்க்கு பரந்துவிட்டனர். வீணஸிலிருக்கும் பெண்களும் மார்ஸிலிருந்து வந்த ஆண்களை நன்கு வரவேற்றனர். பெண்களின் உள்ளுணர்வு இம்மாதிரியான தருணம் வருமென்று ஏற்கனவே சொல்லிருந்த்து போலும்!

இந்த இருவரின் காதல் ஒரு மேஜிக் போன்று இருந்த்து. இருவரும் ஒன்றாக இருப்பதை மிகவும் சந்தோசமாக எண்ணினர், தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர், இருவரும் வெவ்வேறு உலகத்தை சேர்ந்தவராகினும் இருவருக்குள்ளும் இருக்கும் வேறுபாட்டை பகிர்ந்துக் கொள்வதில் நாட்டமிருந்த்து. இருவர்களுமாக பல நாட்கள் தங்கள் பற்றியும், தங்கள் குணாதிசயங்களை பற்றியும், உணர்வுகளை பற்றியும், விறுப்பு வெறுப்புகளை பற்றீயும் விரிவாக விவாதம் நட்த்தி தெரிந்துக் கொண்டனர், புரிந்து வைத்துக்கொண்டனர். இவர்கள் இவ்வாறாக பல வருடங்கள் காதல் வாழ்க்கையில் இன்பமுற்று இருந்தனர்.

பின்பு ஆணும் பெண்ணும் ஒரு நாள் சேர்ந்து பூமிக்கு செல்ல்லாம் என்று முடிவு எடுத்தனர். ஆரம்பத்தில் புதிய பூமியில் வாழ்க்கை இருவருக்கும் சுகமாகவும் அழகானதாகவும், புது அனுபவமாகவும் இருந்தது. பின்பொருநாள் எந்த மாயன் கண்பட்ட்தோ………!!! ஏலியன் கண்பட்ட்தோ………!!! தெரியவில்லை. இருவரும் (ஆணும் பெண்ணும்எழும் போது ஒருவகையான மறதி அவர்களை ஆட்கொண்ட்து. அவ்ளோதான்.!! இருவரும் தாங்கள் இருவரும் வெவ்வேறு இட்த்தினை சேர்ந்தவர்கள் என்பதையே மறந்துவிட்டனர். இருவருக்குமான வேறுபாட்டையும் தாங்கள் இவ்வளவ்வு காலமாக கற்று சேகரித்து மனதில் வைத்திருந்த அனைத்தும் மறந்துவிட்டனர். அவ்ளோதான் ஓகயா………போயிந்தீ!..............போயேபோச்சு………..இட்ஸ் கான்…………… காக்கா ஊச்ச்ச்ச். !!! அந்த பொன்னான நாள்முதல் இன்றுவரை இந்த இருவேறு கிரக வாசிகளும் செய்யும் காமெடியும் அட்ராசிட்டியையும் தான் இந்த உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது…!!!!

இனி நாம் பார்க்கப் போவது இந்த இருவர்கள் இந்த பூமியில் எவ்வாறு புதிராக வாழ்கின்றனர், அவர்கள் எதை மறந்தனர், அவர்களின் புரிந்துணர்வு எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியே ஆகும்.

Tuesday, January 29, 2013

படித்ததில் பிடித்தது - 10

இந்த நேரத்தில் நம்ம உடம்பு என்ன செய்யும்.....



எத்தனை கோடி , கோடியா நாம சம்பாதிச்சாலும், உடல் நலத்தோட இல்லைனா, சவலைப் புள்ளை மாதிரி,எல்லாத்தையும் ஏக்கத்தோட பார்த்து , பார்த்து பெரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...

நம்ம உடம்பை பத்தி , நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்... எதை சரி பண்ணலாம்னு செக் பண்ணிக்கோங்க....
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டு சுழன்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.


விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.

இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம்இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.


விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.
காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்
மலச்சிக்கல் உள்ளவர்கள்இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தைஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.


காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள்.  இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.


காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும். ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.


முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.
இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.


பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம்
இந்த நேரத்தில்மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.


பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம். மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.


இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும். ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவுஉணவுக்கு உகந்த நேரம் இது.


இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை,
டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.


இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.


இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.
இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும்சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

Tuesday, January 1, 2013

கசியும் மௌனம்: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி

கசியும் மௌனம்: மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி: பேச வேண்டிய உண்மைகளைப் பேசாமல் தவிர்ப்பதும், காலம் தாழ்த்துவதும் கூட ஒரு வகையில் குற்றம்தான். இத்தனை காலமும் இந்தச்சமூகம் பேச, ...

Tuesday, November 27, 2012

படித்ததில் பிடித்தது - 9

நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.


சீசரியன், இந்த ஆப்பரேசன முதன்முதலில் செய்தவரே சீசர் தான் ....
அதனால் தான் அந்த பெயர் வந்தது ..... அதுமட்டும் அல்ல உலக அழகி
கிளியோபாட்ரா க்கு தான் சீசர் இந்த ஆப்பரேஷனை செய்தார்


பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.


நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.


கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.


மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.


ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.


மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.


பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.


உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.


ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை


பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.


பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.


பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.


நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.


நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.


யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.


ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.


தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.


முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.


தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.