Sunday, September 23, 2012

நினைவாற்றல் வழுப்பெற பத்து கோட்பாடுகள் - பாகம் 1


தொடர்புபடுத்துதல் / Association


                       அனைவருக்கும் கோடு என்றால் என்னவென்று தெரியும். ஒரே அளவுள்ள நான்கு கோடுகளை ஒன்றன்பின் ஒன்றாக இனைத்தால் நாம் பெருவது ஒரு சதுரம். அதே ஆறு சதுரங்களை இனைத்தால், நாம் பெறுவது கனசதுரம் (Cube). இது எவ்வளவு எளிமையாக புரிகின்றதல்லவா? ஆனால் கோடு மற்றும் சதுரம் என்பதை பற்றி தெரியாமல் யாராலும் கனசதுரம் பற்றி அறிந்து கொள்ள முடியாது.
இந்த எளிய வடிவியல் (geometry) உண்மையை நாம் வாழ்க்கையிலும் கானலாம். நமக்கு தெரியாது விஷயத்தை தெரிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி கற்றுக்கொள்கிறோம், நினைவிலும் வைத்துக் கொள்கிறோம். இவ்வாறு இல்லாமல் அறிவைப்பெற நமக்கு வேறு வழியேயில்லை.

          மேற்கூறிய உண்மையை நீங்கள் எளிதில் உணர ஒரு உதாரணங்கள் பார்ப்போம். நீங்கள் சமஸ்கிருதம் கற்க நினைத்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தண்ணீர் என்பதை சமஸ்கிருதத்தில் ஜலம் என்று அழைப்பர். நீங்கள் தெரிந்த தண்ணீர் என்ற வார்த்தை ஜலம் என்ற தெரியாது வார்த்தையுடன் எவ்வளவு திடமாக அழுத்தமாக தொடர்பு ஏற்படுத்தி நினைவு வைத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அந்த புதிய வார்த்தை நமக்கு வேண்டிய வேளையில் நினைவுக்கு வரும். தண்ணீர் ஜல் ஜல் என்று சப்தம் ஏற்படுத்தும் என்று நாம் தொடர்பு ஏற்படுத்தி நினைவு வைத்து கொள்வோம். இந்த தொடர்பு ஒருமுறை மனதில் நல்ல ஆழமாக பதிய வைத்து விட்டால் போதும். இனி நம் வாழ்நாளில் எப்போது வேண்டும் என்றாலும் நம் நினைவு பெட்டகத்தில் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அதுவும் பெரும் சிரத்தை இல்லாமல்.

          நாம் பெரும்பாலும் இந்த தொடர்பு சங்கிலியை விழிப்புணர்வு இல்லாமல் செய்கிறோம், அதனால் தான் நமக்கு தேவையான வேளையில் நம் நினைவுக்கு வருவதில்லை. ஆகவே தொடர்பு சங்கிலி எளிமையாகவும் ஆழமாகவும் இருப்பது நல்லது. இவ்வாறான சங்கிலியை விழிப்புணர்வுடன் ஏற்படுத்திக் கொண்டால் போதுமானது. நம் மனதில் அது நிலையாக தங்கி விடும். பின் தேவையான தருணத்தில் நம் முயற்சி இல்லாமல் அது நம் நினைவுக்கு வந்து விடும்.
 

நினைவாற்றல் மேல் நம்பிக்கை / Confidence in Memory

          
          நாம் எதையும் செய்யும் முன் நம் நினைவாற்றலின் மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். பின் வரும் வாசகத்தை நினைவில் ஆழமாக உழுது பதியனிடுங்கள்.  
என் மூளை தான் இந்த உலகில் உள்ள அனைத்து கனினியையும் விட மிக சிறந்த்து

          நாம் ஒரு விஷயத்தை நினைவு வைக்க விரும்பா விட்டால், அது கண்டிப்பாக நினைவில் நில்லாது. நாற்பதைந்து வயதானவர்களை நீங்கள் இவ்வாறு சொல்வதை கவனித்திருப்பீர்கள். ‘மன்னிக்கவும், எனக்கு ஞியாபக மறதி அதிகமாய் விட்ட்து (அ) நான் எவ்வளவு நினைவுப்படுதியும் உங்கள் பெயர் நினைவுக்கு வரவில்லை”. இந்த வாசகத்தை அந்த நபர் திரும்ப திரும்ப சொன்னால், அது அவர் நினைவாற்றலை இழந்து கொண்டிருக்கிறார் என்று தான் அர்த்தம்.
    
          நாம் தினம் படுக்கையில் இருந்து எழும்முன் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள வேண்டிய வாசகம் ”நான் என் நினைவாற்றல் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளேன், என்னால் கனினியை விட நன்றாக பணிபுரிய முடியும்”. நம் நினைவாற்றலின் மேல் நம்பிக்கை வளர செய்ய நமக்கு நாமே திரும்ப திரும்ப நம்பிக்கையுடன் சொல்லிக் கொள்வது தான். 

--
(தொடரும்)
anand82kumar

Tuesday, August 14, 2012

படித்ததில் பிடித்தது - 6

“Why We Shout In Anger” 






A Hindu saint who was visiting river Ganges to take bath found a group of family members on the banks, shouting in anger at each other. He turned to his disciples smiled and asked. “Why do people shout in anger shout at each other?” Disciples thought for a while, one of them said, ‘Because we lose our calm, we shout.’ ‘But, why should your shout when the other person is just next to you? You can as well tell him what you have to say in a soft manner’. Asked the saint Disciples gave some other answers but none satisfied the other disciples.


Finally the saint explained.. ‘When two peoples are angry at each other, their hearts distance a lot. To cover that distance they must shout to be able to hear each other. The angrier they are, the stronger they will have to shout to hear each other to cover that great distance. What happens when two people fall in love? They don’t shout at each other but talk softly, because their hearts are very close. The distance between them is either nonexistent or very small..’ The saint continued, ‘When they love each other even more, what happens? They do not speak, only whisper and they get even closer to each other in their love.

Finally they even need not whisper, they only look at each other and that’s all. That is how close two people are when they love each other. He looked at his disciples and said. So when you argue do not let your hearts get distant, Do not say words that distance each other more, Or else there will come a day when the distance is so great that you will not find the path to return.

Monday, July 16, 2012

படித்ததில் பிடித்தது - 5

பிரச்சினையா? அசௌகரியமா?



உங்களுக்குப் பிரச்சினையா?-இதை அவசியம் படியுங்கள்
 பல வருடங்களுக்கு முன்பு ரீடர்ஸ் டைஜஸ்டில் ஒரு கட்டுரை.நண்பர் ஒருவர் அவரின் வலைபூவில் பதிந்ததை உங்களுடன் பகிர்கிறேன்.

 அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர் "நான் படித்த மிகப்பெரிய பாடம்" என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதி இருந்த கட்டுரை அது.

 அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த ஒரு கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப் பளு அதிகம் இருந்த ஒரு நாள் வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தினார். "முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது இது போல் கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை(problem) தருகிறீர்கள்." என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளினார். அவர் பேசியதில் பிரச்சினை என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப்பட்டது.

 எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னார். "நீ பேசும் போது பிரச்சினை என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை (problem) என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத் தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை. உன் வீடு எரிந்து போய் இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது பிரச்சினை.... ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே அது பிரச்சினை. இது போன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்".

"மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள்(inconveniences). இது போன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்த சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக் கணக்கிலோ நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அற்ப விஷயமாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது."

"நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக் கொள். நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இது போன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது"

அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு எல்லாவற்றையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் துவங்கியதாய் அந்த அதிகாரி அந்தக் கட்டுரையில் பின்னாளில் எழுதினார். "

நாமும் அசௌகரியமா, பிரச்சினையா என்று ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலைகளில் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டும். சரியான பெயரில் அணுகும் போதே அதை சமாளிப்பது எளிதாகிறது. அசௌகரியத்தின் சக்தி எல்லாம் அந்தந்த நேரத்திற்குத் தான். நிதானம் இழக்காமல் இருந்தால் தூசைத் தட்டுவது போல் அதைத் தட்டிக் களைய முடியும். அப்படி முடியாததை அந்த நேரத்தில் சற்றுப் பொறுமையாக தாக்குப் பிடித்தால் அந்தக் கட்டத்தை சுலபமாக கடக்க முடியும். அந்தக் கேப்டன் சொன்னது போல வாழ்க்கையில் நாம் பிரச்சினையாகக் கருதுவதில் பெரும்பாலானவை அசௌகரியங்களே.

நம்மில் எத்தனை பேர் அசௌகரியங்களை பூதக்கண்ணாடி மூலம் பார்த்து அதற்குப் பிரச்சினை என்று பெயரிட்டு தேவைக்கும் அதிகமாக கொந்தளித்து, நிஜமாகவே பிரச்சினை ஆக்கி, மற்றவர்கள் மன அமைதியையும், நம் மன அமைதியையும் இழந்து அல்லல் படுகிறோம். பல சமயங்களில் நாம் அப்படிப்பட்ட 'பிரச்சினை'யைக் கைவிடுவது எப்போதென்றால் அடுத்த 'பிரச்சினை' ஒன்று வரும் போது தான்.

நீங்களும் நிதானமாக யோசியுங்கள்- உங்கள் பிரச்சினை உண்மையில் பிரச்சினை தானா? இல்லை இப்போதைய அசௌகரியமா? இப்போதைய அசௌகரியம் என்றால் அப்படி உணரும் போதே மன உளைச்சல் தானாகக் குறையக் காண்பீர்கள். அதை சரி செய்யப் பாருங்கள். அல்லது அலட்சியப்படுத்துங்கள். அதை சிறிது காலம் தாக்குப் பிடியுங்கள். அப்படிச் செய்தால் அவை சீக்கிரமாகவே விலகுவதைக் காண்பீர்கள். அவற்றிற்கு நீங்கள் தரும் நேரமும், கவனமும், சக்தி விரயமும் குறையும் போது உண்மையான ஓரிரு பிரச்சினைகளுக்கோ, தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களுக்கோ அந்த நேரத்தையும், அந்த கவனத்தையும், அந்த சக்தியையும் நீங்கள் தர முடியும். பிரச்சினைகள் இருந்தால் தீர்க்கவும், சாதனைகள் புரியவும் இந்த சிறிய பாகுபாடும், பக்குவமும் நிறையவே உங்களுக்கு உதவி புரியும்.

படித்ததில் பிடித்தது - 4

WHAT IS MATURITY?


 இன்றைய உலகில் அறிவுக்குப் பஞ்சமில்லை. பக்குவத்தைத் தான் அதிகம் பார்க்க முடிவதில்லை. பக்குவம் என்பதென்ன என்ற கேள்விக்கு அருமையான பதிலை சமீபத்தில் படித்தேன். இதோ உங்களுடன் பகிர்கிறேன்.


What is Maturity?

Knowing myself.

Asking for help when I need it and acting on my own when I don't.

Admitting when I'm wrong and making amends.

Accepting love from others, even if I'm having a tough time loving myself.

Recognizing that I always have choices, and taking responsibility for the ones I make.

Seeing that life is a blessing.

Having an opinion without insisting that others share it.

Forgiving myself and others.

Recognizing my shortcomings and my strengths.

Having the courage to live one day at a time.

Acknowledging that my needs are my responsibility.

Caring for people without having to take care of them.

Accepting that I'll never be finished -- I'll always be a work-in-progress.